’’சிலை கடத்தல் வழக்கை விசாரிக்கும் அதிகாரியாக ஐ .ஜி. பொன்மாணிக்கவேல் பொறுப்பேற்ற பிறகு,
வழக்கு விறுவிறு என்று சூடுபிடித்துள்ளது. ஆனால், அந்த விறுவிறுப்பு ஊடகங்களுக்கு தீனி போடுவதாகவும், ஒருவித 
பரபரப்புக்கான ரீதியில்வழக்கு  போய்க்கொண்டு இருக்கிறது.’’ என்கிறார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் வன்னி அரசு.

’’காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலுக்கு தங்கம் வாங்கியது தொடர்பான வழக்கில், இந்து அறநிலையத்துறையைச்சார்ந்த திருமதி கவிதாஅவர்கள் கைது செய்யப்பட்டு திருச்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.பிணை கேட்டு கவிதா அம்மையார் விண்ணப்பித்தார்.விண்ணப்பத்தில்,“ என்னை கைது செய்ததற்கான எந்த முறையையும் பின்பற்றவில்லை. இந்த வழக்கு தொடர்பான எந்த ஆதாரமும் காவல்துறையிடம் இல்லை” என்று சொல்லி பிணை கேட்டார்.


இதற்கு நீதிபதிகள் சம்மந்தப்பட்ட அதிகாரியான பொன்மாணிக்கவேலுவிடம் கேட்டதுக்கு,“சத்தியமா ஆதாரம் இருக்கு.  கும்பகோணம் நீதிமன்றத்தில் ஆதாரத்தை ஒப்படைக்கிறேன்” என்று பதில் கூறியுள்ளார்.

ஒரு நேர்மையான அதிகாரி ஆதாரத்தை தான் தர வேண்டுமே ஒழிய சத்தியமெல்லாம் செய்ய வேண்டியதில்லை. நீதிமன்றத்துக்கு தேவை ஆதாரங்கள் தானே ஒழிய நம்பிக்கை ஏற்படுத்தும் வார்த்தைகள் அல்ல”இது நீதித்துறைக்கும்
பொன்மாணிக்கவேலுக்கும் தெரியாததல்ல.ஆக, தவறான விசாரணையின் போக்குக்கு இது ஒரு உதாரணம்.
கூடுதல் ஆணையர் கவிதா அவர்கள் ஒரு நேர்மையான அதிகாரி. ஆண்கள் மட்டுமே அறநிலையத்துறை அதிகாரிகளாக இருக்கலாம் என்பதை உடைத்து பொறுப்புக்கு வந்தவர். கோவில்களுக்குள் நடக்கும் அநீதிகளை தட்டிக்கேட்டவர். 

பார்ப்பனர்கள் பெண்களுக்கு முதல்மரியாதை தருவதில்லை. அது ஆகம விதிகளுக்கு எதிரானது என்று ஆச்சாரம் கற்பித்து வந்ததை உடைத்து எறிந்தவர் இந்த கவிதா.உண்மையிலேயே இந்த வழக்கில் கைது செய்யப்பட்டிருக்க வேண்டியவர் ஒரு அர்ச்சகர் தான். அவர் தான் கோவில் சிலைகளுக்காக தங்கம் வசூல் செய்தவர். முறைகேடு அந்த பார்ப்பணர் தான் செய்துள்ளார்.ஆனால் அவரை கைது செய்யாமல் அவரிடமே புகார் வாங்கி கவிதா அவர்களை கைது செய்திருக்கிறார் பொன்மாணிக்கவேல்.

சரி எதற்காக இப்படி தவறான நடவடிக்கைகள்? சிலை கடத்தல் வழக்குக்கும் இப்போது எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை.


அப்படி சிலை கடத்தல் வழக்கில் கைது செய்ய வேண்டுமானால் அர்ச்சகர்களைத்தான் கைது செய்திருக்கவேண்டும்.
ஏனென்றால், சிலைகளை பராமரிப்பது, புனஸ்காரங்கள் செய்வது என்று எல்லாமே அர்ச்சகர்கள் தான் கவனித்துக்கொள்கிறார்கள். அப்படி இருக்கும் போது சிலைகள் திருடு போவது குறித்த விசாரணையில்,
அர்ச்சகர்கள் விசாரணைக்குள்ளேயே வராதது ஏனோ?

இந்த கேள்விகளுக்கு பதில் வேண்டுமானால்,கொஞ்சம் இந்து சமய அறநிலையத்துறை உருவான வரலாறு தெரிந்து கொள்ள வேண்டும்.இந்து சமய கோவில்கள். இந்தியாவில் லட்சக்கணக்கில் உள்ளன.இந்த கோவில்களை பராமரிக்கும் பணியை 
பார்ப்பணர்களே பார்த்துக்கொண்டனர்.பார்ப்பணர்களைத்தவிர யாரும் கோவிலுக்குள் போகமுடியாது.
சூத்திரர்களாக இருந்தாலும், சத்திரியர்களாக இருந்தாலும், வைசியர்களாக இருந்தாலும் எல்லோருக்கும் தீண்டாமை தான்.
இந்து சமய கோவில்களின் சொத்துக்கள் தாறுமாறாய் கிடந்தன.ஏகபோக சுகவாசிகளாகஅர்ச்சகர்கள் என்ற பெயரில் கொழுத்து திரிந்தனர். 

இதை முறைப்படுத்துவதற்காக1817 ஆம் ஆண்டு,’மதராஸ் நிலைக்கொடைகள் மற்றும் அரசு பொருட்கள் ஒழுங்குறுத்தும் சட்டம்’
ஒன்று உருவாக்கப்பட்டது.இந்த சட்டம் வருவாய் வாரியத்துக்கு அதிகாரம் வழங்கி கண்காணிக்க உத்தரவிட்டது.1858 ஆம் ஆண்டு,கிழக்கிந்திய கம்பெனியிடமிருந்து பிரிட்டிசார் இந்தியாவின் ஆட்சி பொறுப்பை ஏற்ற பிறகு, பார்ப்பணர்கள் திரண்டு போய் வைஸ்ராயிகளிடம்,“இந்து சமய கோவில்களை நாங்களே நிர்வாகம் செய்து கொள்கிறோம்”என்று முறையிட்டனர்.
விக்டோரியா மகாராணியும் அதை ஏற்று,‘மதத்தில் தலையிடுவதில்லை’என்று அறிவித்தார்.

இந்த அறிவிப்பு பெருமளவில் கோவிலை நம்பி பிழைப்பு நடத்துவோருக்குமகிழ்வை தந்தது.வழக்கம் போல கோவில்களில் தீண்டாமை கடைபிடிக்கப்பட்டது.கோவில் சொத்துக்கள் கொள்ளை போயின.இந்த கொள்ளைகளை கட்டுப்படுத்த 1863 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் அரசு, அறநிலையங்கள் தொடர்பான சட்டத்தை இயற்றி ஒருங்குபடுத்த முயன்றது.ஆனாலும் முழுமையாக கட்டுப்படுத்த முடியவில்லை.இதற்கிடையே, 1919 ஆம் ஆண்டு மாண்டேகு- செம்ஸ்போர்டு கொண்டு வந்த இரட்டை ஆட்சிமுறை இன்னொரு பரிமாணத்தை தந்தது.பார்ப்பணரல்லாதோர் அமைப்பாக உருவான ‘தென்னிந்திய நல உரிமைகள் சங்கம்’
தேர்தலில் போட்டியிட்டு 1920 ஆம் ஆண்டு மதராஸ்  மாகாணத்தை கைப்பற்றியது.

அதுவே பின்னாளில் நீதிக்கட்சியாக உருவானது. சமூக நீதிக்கொள்கைகளை நிலை நிறுத்த பல புரட்சிகர நடவடிக்கைகளை
நீதிக்கட்சி மேற்கொண்டது.அதில் ஒன்று தான், 1927 ஆம் ஆண்டு’ இந்து சமய அறநிலையங்கள் சட்டம்’கொண்டுவரப்பட்டு,
இந்து கோவில்களை அரசு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது.அதாவது,
குறிப்பிட்ட சமூகத்திடமிருந்துஅரசு கையகப்படுத்தியது. இதன் வளர்ச்சியாகத்தான் 1959 ஆம் ஆண்டு,தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறைச்சட்டம் கொண்டு வரப்பட்டது.


இந்த சட்டத்தின் கீழ் 38,618 இந்து கோவில்கள், 17 சமணக்கோவில்கள், மடங்கள்  என்று கொண்டு வரப்பட்டு நிர்வாகம் பார்க்கப்பட்டு வருகின்றன.இன்னும் இதே அளவிலான கோவில்கள் குறிப்பிட்ட சமூகத்தவரிடம்  சிக்கியுள்ளன.
அதையும் மீட்க இன்னும் முடியவில்லை. இது தான் இந்து சமய அறநிலையத்துறை உருவாக்கப்பட்ட வரலாறு.சமூக நீதிக்காகத்தான் இந்த துறை உருவாக்கப்பட்டது.“தண்டச்சோறு திண்ணும்பார்ப்பாணுக்கு ஒரு நீதியா?” என்று பாரதி கேட்டதுக்கு நீதிக்கட்சி விடையளித்தது. தலித்துகள் கோவிலுக்குள்ளே போகவே முடியாத சூழலை உடைத்து நொறுக்கினர்.

பெருந்தலைவர் காமராசர் ஒரு படி மேலே போய் பி.ஆர்.பரமேசுவரன் அவர்களைஇந்து சமய அறநிலையத்துறைக்கே 
அமைச்சராக்கி சமூக நீதியை வென்றெடுத்தார்.தந்தை பெரியாரின் கொள்கை கோட்பாடுகளைபெருந்தலைவர் காமராசர்,
அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி ஆகியோர் செயல்படுத்தினர்.இந்த சமூகநீதியை புடுங்கி போட பார்ப்பணர்கள் 
சமயம் பார்த்துக்கொண்டிருந்தனர்.இந்து கோவில்களை இந்துக்களே பராமரிக்க வேண்டும் என்று இந்துத்துவ சனாதனிகள் புலம்பி வந்தனர்.தேவாலயங்களை எப்படி கிறித்துவ மடங்களே பராமரிக்கின்றனவோ,பள்ளிவாசல்களை எப்படி வக்பு வாரியங்களே பராமரிக்கின்றனவோ,அப்படி இந்துக்கோவில்களை இந்துக்களே நிருவாகம் பார்க்க வேண்டும் என்று பன்னெடுங்காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்தியாவில் தமிழகத்தில் மட்டுமே இந்து அறநிலையத்துறை உள்ளது.தமிழகத்தை முன்மாதிரியாக எடுத்துக்கொண்டு ஆந்திர மாநிலத்தில் கடந்த பத்தாண்டுகாளாக இந்து அறநிலையத்துறை அமைக்கப்பட்டுள்ளது.ஆந்திரத்தில் இன்னும் கூடுதலாக,
பரம்மபரை தர்மகர்த்தாக்கள் முறை அகற்றப்பட்டு சமூகநீதியை நிலைநாட்டி வருகிறது ஆந்திர அரசு.இந்த சூழலில் தான்,
ஆளும் பாசக கும்பல் இந்து அறநிலையத்துறையைஅகற்றி வருணாசிரம கொள்கையை நடைமுறைப்படுத்த,துடித்துக்கொண்டு இருக்கின்றனர்.அதற்கான சரியான தருணம் இது தான் என்று
நேரம் குறித்து செயல் பட்டுவருகின்றனர்.

முதலில் இந்துகோவில்களில் நிர்வாகம் சரியில்லை என்றும் ஊழல்கள் நிரம்பி வழிகின்றன என்ற பரப்புரையை கட்டவிழ்த்து விடுகின்றனர்.அதற்கு பொன்மாணிக்கவேல் தான் சரியான அடிபொடியாளாக இருப்பார் என்று, 
அவரை வைத்து இந்து அறநிலையத்துறையை மூட முயற்சிக்கின்றனர்.பொன்மாணிக்கவேல் நீதிமான் போன்ற பிம்பத்தை திட்டமிட்டே கட்டி வருகின்றனர்.ஆனால் அது முற்றிலும் பொய். பணி நிறைவு நேரத்தில் பணி நீட்டிப்பு செய்ததன் பின்னணியில் பாஜக  இருக்கிறது. இந்து அறநிலையத்துறையை ஊழல்மயமான துறையாக கட்டவிழ்த்து விட்டு களங்கப்படுத்துவது தான்
இப்போதைக்கு பொன் மாணிக்கவேலுவுக்கு கொடுக்கப்பட்ட ‘அசைன்மென்ட்’.அதற்கு பரிசு தான் இந்த பணி நீட்டிப்பு. இதற்கு நீதிமன்றமும் ஒத்துழைப்பு கொடுத்திருப்பது நீதித்துறைக்கே களங்கமாகும்.இன்னும் என்னென்ன செயல்திட்டங்கள் கொடுக்கப்பட்டுள்ளதோ தெரியவில்லை’’ என்கிறார் வன்னி அரசு.