மு.க.ஸ்டாலின் கூட்டிய அனைத்துக்கட்சி கூட்டத்தை விசிகே தலைவர் திருமாவளவன் புகழ்ந்து தள்ள , அவரது கட்சி செய்தி தொடர்பாளர் வன்னி அரசோ முகநூலில் திமுகவை கடுமையாக விமர்சித்துள்ளார்.

திமுக சார்பில் மு.க.ஸ்டாலின் கூட்டிய அனைத்து கட்சி கூட்டத்தில் கலந்துகொள்ள திருமாவளவன் துடியாக துடித்தார். இதனால் மக்கள் நலக்கூட்டணிக்குள் குழப்பம் ஏற்பட்டது . மு.க.ஸ்டாலின் கூட்டிய கூட்டத்தை புகழோ புகழ் என திருமா புகழ்ந்து தள்ளிவிட்டார்.
கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என முடிவெடுத்தாலும் அதையும் விரிவாக ஸ்டாலினுக்கு கடிதமாக திருமா எழுத , அதற்கு நன்றி சொல்லி ஸ்டாலின் உங்கள் உள்ளகிடக்கை தெரிகிறது என அறிவிக்க இரண்டு பக்கமும் உருகி தள்ளிவிட்டனர்.
ஆனால் அதே விடுதலை சிறுத்தைகள் கட்சியின் செய்தி தொடர்பாளர் வன்னி அரசு தனது முகநூல் பக்கத்தில் திமுக நடத்திய அனைத்து கட்சி கூட்டத்தை கடுமையாக விமர்சித்து எழுதியுள்ளார்.
அவருடைய முகநூல் பதிவு :
சடங்குதனமான தீரமானங்களுக்கா அனைத்துக்கட்சி கூட்டம் ?
திமுக நடத்திய அனைத்துக்கட்சி கூட்டத்தில் 4 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
இந்த தீர்மானங்கள் மூலமாக இந்த கூட்டம் தோல்வி அடைந்து விட்டதாகத்தான் கருத முடிகிறது. அதாவது, எந்த ஒரு வலிமையான போராட்டத்தை முன்னெடுக்காமல்
சடங்குதனமான தீர்மானங்களை தான் நிறைவேற்றி இருக்கிறார்கள்.
வழக்கம்போல,
மத்திய அரசுக்கு கண்டனமாம்..
இது ஒரு தீர்மானம்
(நம்புங்கள்)
இரண்டாவது,
பிரதமரை சந்தித்து
முறையிடுவதாம்
மூன்றாவது,
காவேரி மேலான்மை வாரியத்தை
உடனடியாக அமைக்க வேண்டுமாம்
நான்காவது,
காவிரி தொழில் நுட்ப குழு
நேர்மையான அறிக்கையை தயாரிக்க வேண்டுமாம் அத்துடன்,
மத்திய அரசு ஏக்கருக்கு 30ஆயிரம் ரூபாய் விவசாயிகளுக்கு இழப்பீடு தரணுமாம்
அடேங்கப்பா
என்ன புரட்சிகரமான தீர்மானத்தை
போட்டுவிட்டார்கள் பாருங்கள்.
கடந்த அக்டோபர் 6 ம் தேதி திரு.தெய்வசிகாமணி அவர்களது தலைமையிலான விவசாயிகள் சங்க கூட்டத்தில் ,
10 லட்சம் மக்களை திரட்டி தலைநகர் சென்னையில் மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுக்கிற வகையில் பேரணி நடத்த
தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அதை நடைமுறைப்படுத்தாமல், கிடப்பில் போட்டுவிட்டு, வெறும் சடங்குதனமான தீர்மானங்களை போட்டிருப்பது
காவிரிக்காக அல்ல,
தேர்தலுக்கான
அனைத்துக்கட்சி கூட்டம் என்பதை
இத் தீர்மானங்கள் வழிமொழிகின்றன.
இப்படியான கூட்டத்தில்
கலந்து கொள்ளாவிட்டால்
துரோகிகளாம்...
கூடங்குளம் அணு உலைகள்,
மீத்தேன்,
மணல் கொள்ளை,
மது வியாபாரம்...
இப்படி அடுக்கடுக்கான
துரோகங்களை
தமிழ் மக்களுக்கு
அள்ளி தந்த
திமுக துரோகத்தை பேசலாமா?
வன்னி அரசு. இவ்வாறு வன்னி அரசு தெரிவித்துள்ளார்.
