Asianet News TamilAsianet News Tamil

பொன்மாணிக்கவேல் விவகாரத்தில் பதில் தேவைப்படும் அந்த பத்து கேள்விகள்... வறுத்தெடுக்கும் வன்னி அரசு...

இப்படியான திருட்டுப்போன சிலைகளை மீட்டெடுக்கவே பொன்.மாணிக்கவேல் உருவானதை போல நீதிமன்றமும் நம்புவது தான் வேதனை அளிக்கிறது.
இந்த சூழலில் பொது வெளியில் எழும் சில கேள்விகளை இங்கே முன் வைக்க விரும்புகிறேன்.

vck vanni arasu blames pon manickavel
Author
Chennai, First Published Dec 30, 2018, 4:13 PM IST

'பொன்மாணிக்கவேல் விவகாரத்தில் அரசு நிர்வாகத்தில் நீதிமன்றம் தலையிடாது என்று சொல்லிவிட்டு 
ஒரு மாதத்தில் தலையிட்டதற்கான காரணத்தை நீதிமன்றம் சொல்லுமா?அந்த  ஒரு மாத காலத்தில் என்ன நடந்தது என்று வெளிப்படையாக நீதிமன்றம் சொல்லுமா?
’ என்று கேள்வி எழுப்புகிறார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் வன்னி அரசு.vck vanni arasu blames pon manickavel

சிலை கடத்தல் விவகாரம் தொடர்பான சர்ச்சைகள் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில் பொன்மாணிக்கவேலுக்கு பத்து கேள்விகளை முன்வைக்கிறார் வன்னி அரசு. 

’’...ஒரு ஜேம்ஸ்பான்டை போல 
பல பல சாகசங்களை செய்து சிலைகளை மீட்டு வருவதாக
‘சீன்’போட்டு வருகிறார் 
பொன்.மாணிக்கவேல்.
பாவம் அவர் சிலைகளை மீட்க படாதபாடுபட்டு வருவதை போல 
காட்டிக்கொள்கிறார்.
ஊடகங்களில் பார்த்தாலே தெரிகிறது.

இப்படியான திருட்டுப்போன சிலைகளை மீட்டெடுக்கவே பொன்.மாணிக்கவேல் உருவானதை போல நீதிமன்றமும் நம்புவது தான் வேதனை அளிக்கிறது.
இந்த சூழலில் பொது வெளியில் எழும் சில கேள்விகளை இங்கே முன் வைக்க விரும்புகிறேன்.vck vanni arasu blames pon manickavel

1.சிலை கடத்தலில் காவல்துறை உயரதிகாரிகளுக்கும் தொடர்பு இருக்கிறது என்று 
இன்றைக்கு பாஜகவின் ரவுடிகளில் ஒருவரான sorry செயலாளர்களில் ஒருவரான எச்.ராஜா 
திருவாய்மலர்ந்துள்ளார்.
பொன்.மாணிக்கவேலு சொல்லுவதற்கு முன்பாகவே எச்.ராஜா சொல்வதன் 
உள்நோக்கம் என்ன?

2. சிலை கடத்தலில் தொடர்புடைய
போலீஸ் உயரதிகாரிகள் யார் யார் என்று 
பட்டியல் வெளியிட முடியுமா?

3. இந்து அறநிலையத்துறை அதிகாரிகளும் காவல்துறை அதிகாரிகளும் பொன்.மாணிக்கவேலுவின் அதிகார பிறழ்வுகளை காவல்துறை இயக்குனரிடம் புகார் கூறியதற்கு 
எதிர்வினையாகத்தான்
எச்.ராஜாவின் குற்றச்சாட்டா?vck vanni arasu blames pon manickavel

4. 2018அக்டோபர் 25 ம்தேதி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஶ்ரீதரன் என்பவர் பொன்.மாணிக்கவேலுக்கு பணி நீட்டிப்பு செய்ய வலியுறுத்தி மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த நீதிபதி மகாதேவன் அவர்கள், 
“அரசு நிர்வாகத்தில் நீதிமன்றம் தலையிடாது. இப்படி ஒரு மனுவை தாக்கல் செய்த மனுதாரரை இந்த நீதிமன்றம் கண்டிப்பதோடு இனி இப்படி செய்தால் அபராதம் விதிக்கப்படும்”
என்று எச்சரித்தார். ஆனால், நவம்பர் 30.2018 அன்று பொன்.மாணிக்கவேல் பதவி ஓய்வு பெற்ற அன்றே சிறப்பு அதிகாரியாக நியமித்தது ஏன்?

5.அரசு நிர்வாகத்தில் நீதிமன்றம் தலையிடாது என்று சொல்லிவிட்டு 
ஒரு மாதத்தில் தலையிட்டதற்கான காரணத்தை நீதிமன்றம் சொல்லுமா?அந்த  ஒரு மாத காலத்தில் என்ன நடந்தது என்று வெளிப்படையாக நீதிமன்றம் சொல்லுமா?

6. பொன் மாணிக்கவேலுக்கு பணி நீட்டிப்பு கொடுத்த உத்தரவில், நீதிபதி மகாதேவன், . 
No action or enquiry against the Special officer or any member of his team shall be initiated except with the concurrence of this Court. If any materials are there to rely upon for necessary action, the same be placed before this court for further directions.
அதாவது, பொன் மாணிக்கவேல் மீதோ, அல்லது அவர் கீழ் பணி புரியும் எவர் மீதுமோ, நீதிமன்ற உத்தரவு இல்லாமல் எந்த நடவடிக்கையும்  எடுக்கக் கூடாது என்பதே.  அப்படி அவர்கள் மீது புகார் ஏதாவது வந்தால், அதை நீதிமன்றத்தில்தான் சமர்ப்பிக்க வேண்டும்.
ஒரு அரசுத் துறையில் எந்த அதிகாரிக்காவது இப்படியொரு பாதுகாப்பை நீதிமன்றம் வழங்க முடியுமா ?7. பொன்.மாணிக்கவேலுவுக்கு மட்டும்
தனிசட்டமா? சட்டம் எல்லோரும் பொது தானே?vck vanni arasu blames pon manickavel8. காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் சிலை செய்தது தொடர்பான ஊழலில் முத்தையா ஸ்தபதி, முருகேசன்( Eo) ராஜப்பா குருக்கள் மற்றும் குருக்களைச்சார்ந்த நான்குபேர் மீது FIR போடப்பட்டது.விசாரித்துவிட்டு
கூடுதல் ஆணையர் கவிதா அவர்களை மட்டும் கைது செய்தது ஏன்? குருக்கள் அதாவது அர்ச்சகர் உள்ளிட்டோரை கைது செய்யாதது ஏன்?  
கூடுதல் ஆணையர் கவிதா அவர்களை கைது செய்த பின் FIR போடப்பட்டதா? அல்லது கைது செய்த பின் போடப்பட்டதா? என்பதை பொன்.மாணிக்கவேல் விளக்கமளிப்பாரா?

9. பொன்.மாணிக்கவேல் சிலை தடுப்பு மற்றும் சிலை மீட்புக்கான ஐஜியா அல்லது ஊழல் தடுப்புக்கான ஐஜியா?
இரண்டும் ஒரே துறையா?
நீதிமன்றம் தெளிவு படுத்துமா?

10. இந்து அறநிலையத்துறை ஆணையராக இருந்த திருமதி ஜெயா,
திரு. இராமச்சந்திரன் ஆகியோருக்குப்பிறகு இன்னும் தனி ஆணையரை அரசு நியமிக்காதது ஏன்?
(இப்போதுள்ள பனீந்தர் ரெட்டி அறநிலையத்துறையை கூடுதலாக கவனித்துக்கொள்கிறாரே தவிர தனி ஆணையர் அல்ல)

இந்த பத்து கேள்விகளும் பொதுமக்களுக்கு எழுந்துள்ள சந்தேகங்கள் தான்.
இந்த சந்தேகங்களை அரசு மற்றும் நீதிமன்றம் தெளிவுபடுத்துமா?

Follow Us:
Download App:
  • android
  • ios