Asianet News TamilAsianet News Tamil

விடுதலை சிறுத்தைகள் பற்றவைத்த நெறுப்பு இன்று நாடு முழவதும் படர்ந்து எரிகிறது - திருமாவளவன்

சனாதனத்திற்கு எதிராக விடுதலை சிறுத்தைகள் பற்ற வைத்த நெறுப்பு இன்று நாடு முழுவதும் படர்ந்து எரிவதாக விசிக தலைவர் தொல்.திருமாவளவன் குறிப்பிட்டுள்ளார். 

vck president thol thirumavalavan slams governor rn ravi vel
Author
First Published Sep 11, 2023, 11:19 PM IST

சாதி ஒழிப்பு போராளி தியாகி இம்மானுவேல் சேகரன் நினைவு தினத்தை ஒட்டி அவரது படத்திற்கு விடதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் மலர் மாலை அணிவித்தார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர்  கூறுகையில், விடுதலை சிறுத்தைகள் கட்சி பற்ற வைத்த நெருப்பு ஒன்று பற்றி படர்ந்து எரிகிறது.

100 விழுக்காடு வடிகட்டிய சனாதன ஆளுநர் ஆரன் ரவி. 2024 நாடாளுமன்ற பொது தேர்தலில் சன்பரிவாளர்கள் ஆட்சியை ஆட்சிப் பீடத்தில் இருந்து அப்புறப்படுத்துவதே நமது சவால். சாதி ஒழிப்பு போராளி தியாகி இம்மானுவேல் சேகரன் சமூக மாற்றத்திற்கான பங்கை போற்றும் வகையில் அவர்களுக்கு 3 கோடி மதிப்பில் மணிமண்டபம் அமைக்கப்படும் என்றும் கூறிய முதல்வருக்கு நன்றி.

சென்னையில் 6ம் வகுப்பு மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சக மாணவர்கள்

மணிமண்டம் வேண்டும் என்று விசிக சார்பில் நீண்ட காலமாக கோரிக்கை வைக்கப்பட்டது. இன்று இந்த அறிவிப்பு வந்தது மகிழ்ச்சி அளிக்கிறது. அவரது நினைவு நாளான இன்று சனாதன வேர் அறுப்பை இன்னும் தீவிரமாக முன்னெடுப்போம் என்று உறுதயளிக்கிறேன். சனாதனம் எவ்வளவு கொடூரமானது என்று அனைவரும் பேசி வருவது அறுதல் அளிக்கிறது.

சனாதனத்தின் உண்மையான பொருள் என்ன என்பதை அனைவரும் உணர தொடங்கி உள்ளனர். வட இந்திய தேர்தல்களில் 4 இடங்களில் இந்தியா கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. இதனால் வாய்க்கு வந்ததை சிலர் உளறி கொண்டு உள்ளனர். கண்டிப்பாக இந்தியா கூட்டணி வெற்றி பெறும். அமைச்சர் சேகர் பாபு பதவி விலக வேண்டும் என்று கூறி பாஜக சார்பில் இன்று பல இடங்களில் போராட்டம் நடைபெறுவது என்பது தேர்தல் யுக்தி. 

பள்ளி மாணவர்களின் நெஞ்சத்தில் ஜாதி தீயை பற்றவைக்கும் பெற்றோர்; பட்டியலின பெண் சமைப்பதற்கு எதிர்ப்பு

இந்து சமூகத்தினரை ஏமாற்றும் முயற்சி. இந்து மதப் பற்றாளர் அமைச்சர் சேகர்பாபு. இந்து மதம் மீது அதிகம் அன்பு கொண்டவர். அண்ணாமலை போன்றவர்கள் சனாதன சக்திகளுக்கு பணிவிடை செய்யும் சேவைகாரர்கள். அவரவர் குளத்தில் அவரவர் திருமணம் செய்து கொள்ள வேண்டும் அதுதான் சனாதனத்தின் அடிப்படை. G20 மாநாட்டு விருந்தில் தமிழ்நாடு முதல்வர் மற்றும் மேற்கு வங்க முதல்வர் இருவரும் குடியரசு தலைவர் அழைப்பு விடுத்ததால் மரியாதை நிமித்தம் மட்டுமே கலந்து கொண்டதாக விளக்கம் அளித்தார்.

Follow Us:
Download App:
  • android
  • ios