சங்கி என்று நாம் கூறி வருகிறோம் சங்கி என்பது சங்கம் அல்லது அமைப்பு ஆகும், ஆர்எஸ்எஸ் அமைப்பு பாரதிய ஜனதா கட்சியை வைத்து இந்த தமிழ்நாட்டை கைப்பற்றி வருகிறார்கள்.

விழுப்புரத்தில் பொதுக்கூட்டம் :

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் காந்தியார் திடலில் மாநில உரிமை மீட்பு பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் திராவிட கழக தலைவர் கி. விரமணி, விசிக தலைவர் திருமாவளவன், அமைச்சர் செஞ்சி மஸ்தான் ஆகியோர் கலந்துகொண்டு நீட் தேர்வு, புதிய கல்வி கொள்கை எதிர்ப்பு பற்றி பேசினர். அப்போது விசிக தலைவர் திருமாவளவன், 'சமூகநீதியை காப்பாற்ற வேண்டும், சமூக விரோத சக்திகளை விரட்டியடிக்க வேண்டும் என்கிற கொள்கையோடு நாகர்கோவிலில் இருந்து சென்னை வரை பரப்புரை பயணத்தை தமிழர் தலைவர் வீரமணி மேற்கொண்டிருக்கிறார். 

உடல் நிலை சரியில்லை என்றாலும், சோம்பி இருக்காமல் முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகளை மையப்படுத்தி நீட் தேர்வு எதிர்ப்பு, தேசிய கல்வி கொள்கை, உழைக்கும் மக்களுக்கு எதிராக மாநில உரிமைகளை பறிக்க கூடாது என்ற இந்த மூன்று பிரச்சினைகளை மையப்படுத்தி இந்தப் பரப்புரையை மேற்கொண்டு வருகிறார். இச்சமூகம் விழிப்புணர்வு பெறுவதோடு மட்டுமல்லாமல், இது தொடர்பான கருத்துக்களை மக்களிடையே கொண்டு போய் சேர்க்க வேண்டும் என்பதற்காக சிறு கையேடு ஒன்றையும் தயாரித்து வெளியிட்டுள்ளார்.

சங்கி என்று நாம் கூறி வருகிறோம் சங்கி என்பது சங்கம் அல்லது அமைப்பு ஆகும், ஆர்எஸ்எஸ் அமைப்பு பாரதிய ஜனதா கட்சியை வைத்து இந்த தமிழ்நாட்டை கைப்பற்றி வருகிறார்கள். தந்தை பெரியார் பேசிய அரசியலுக்கு நேர் எதிராகவும் அம்பேத்கர் கொள்கை கோட்பாட்டுக்கு நேர் எதிர் இயக்கமாக பாரதிய ஜனதா கட்சி செயல்பட்டு வருகிறது. பார்ப்பன சமூகத்தின் நலனை மையமாகக் கொண்டு மராட்டிய, குஜராத்திய பார்ப்பனர்களால் உருவாக்கப்பட்ட அமைப்பின் பெயர் தான் ஆர்எஸ்எஸ் அமைப்பு.

பிறப்பால் பார்ப்பனர்கள் உயர்ந்தவர்கள் மற்ற எல்லோரும் ஆண்ட பரம்பரை என கூறிவரும் சத்திரியர்களாக இருந்தாலும் அனைவரும் பார்ப்பனர்களுக்கு கீழ் தான் என ஆர்எஸ்எஸ் அமைப்பு தெரிவித்துள்ளது. பாரதிய ஜனதா கட்சியின் கிளை இயக்கம்தான் ஆர்எஸ்எஸ் அமைப்பு. பாரதிய ஜனதா கட்சிக்கு என கொள்கை கோட்பாடுகள் கிடையாது. ஆர்எஸ்எஸ் அமைப்பின் கொள்கையை தான் இவர்கள் பின்பற்றி வருகிறார்கள்.

ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவதற்காக உருவாக்கிய அமைப்புதான் ஜனசங்கம் ஆனால் அவை மக்களிடம் எடுபடவில்லை. இந்தியா அனைத்து மதங்களையும் அனைத்து கலாசாரங்களைப் பின்பற்றும் கூடியது. இந்த நிலையில் இந்தியாவில் ஒரே மதம் தான் இருக்க வேண்டும் என பாரதிய ஜனதா கருத்து நியாயமானதா? ஒரே மதம், ஒரே மொழி தான் இருக்க வேண்டும் என ஒரே நோக்கத்தோடு பாரதிய ஜனதா கட்சி செயல்பட்டு வருகிறது. இந்த நோக்கத்தில்தான் தற்போது இந்தி திணிப்பை முன்னெடுத்து வருகிறது' என்று கூறினார்.

இதையும் படிங்க : அதிமுகவுக்கு ‘ஆப்பு’ வைத்த கோவை மேயர் கல்பனா.. அதிர்ச்சியில் கோவை அதிமுகவினர் !!