இந்தி வேண்டும் என்பதுதான் ரஜினி காந்தின் எண்ணம் , ஆனால் அதை ஒருகாலம் இங்கு புகுத்த முடியாது என்பதை உணர்ந்ததால் ரஜினி அதற்கு எதிராக பேசியுள்ளார். இந்தி திணிப்பு விவகாரத்தில் அவர் கூறிய கருத்து,  பாம்பும் சாகக் கூடாது பிரம்பும் உடையக்கூடாது என்பதைப்போலவே  உள்ளது என விடுதலை சிறுத்தைகள் கட்சி நடிகர் ரஜினியை மிகக்கடுமையாக விமர்சித்துள்ளது. 

காஷ்மீர் விவகாரத்தை தொடர்ந்து, ஒரே மொழி, ஒரே தேசம் என்ற ஆபரேஷனுக்கு  தற்போது தயாராகி உள்ளது மத்திய அரசு. அது குறித்து உள்துறை அமைச்சர் அமித்ஷா, தன்னுடைய கருத்தை பகிரங்கமாக பேசி வருகிறார் . முன்வைத்த காலை பின்வைக்கா மாட்டார் என்ற பெயர் வாங்கிய அமித்ஷா, நாடு முழுமைக்கும் இந்தியை கொண்டுவந்தே தீருவேன் என்று முழங்கிவருகிறார். இது  இந்தி பேசாத மாநில மக்களின் மத்தியில் கொதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.  இந்தி எதிர்ப்பு போரட்டத்தில் களம் கண்டு வெற்றி பெற்ற வரலாறு தமிழகத்திற்கு ஏற்கனவே உண்டு என்பதால் ஒரு கை பார்த்துவிடலாம் என்று தமிழகமும் போராட்டத்திற்கு தயாராகி வருகிறது.

 

இதையெல்லாம் உணர்ந்துள்ள நடிகர் ரஜினிகாந்த் இந்தி மொழி குறித்து இன்றுதன் திருவாய் மலர்ந்திருக்கிறார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித் அவர் இந்தி திணிப்பை ஏற்க முடியாது என கூறி அதிரடி காட்டியுள்ளார் , நடிகர் ரஜினியின் இக் கருத்தை பல அரசியல் கட்சிகள் முதல் பொதுமக்கள் வரை வரவேற்று ஆதரவு தெரிவித்துள்ளனர். இந் நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொது செயலாளர்களில் ஒருவரான வன்னி அரசு நடிகர் ரஜினியின் கருத்தை  கடுமையாக விமர்சித்து சமூக வலைதளத்தில் கருத்து ஒன்று பதிவுசெய்துள்ளார். 

அதில். “கொள்கைன்னாலே தலை சுத்துது” என்று நடிகர் ரஜினி அவர்கள் முன்னொருகாலத்தில் சொன்னது தான்  இந்தி பொதுமொழி என தற்போது பேசியிருப்பது  நினைவுபடுத்துகிறது.“பொது மொழி இருந்தால் நல்லது. அப்போது தான் நாடு வளர்ச்சி அடையும். ஒற்றுமையாக இருக்கும்.ஆனால் நம்ம நாட்டில் துரதிர்ஷ்டவசமாக அது இல்லை. இந்தியை திணித்தால் இந்தி பேசும் மாநிலங்களும் எதிர்க்கும். சவுத் இந்தியாவும் எதிர்க்கும்” இதுதான் ரஜினி அவர்கள் பேசியது. அவரது நிலைப்பாடு என்பது பொதுமொழி வேண்டும் என்பது தான். ஆனால் அது சாத்தியமில்லை என்பதை புரிந்து கொண்டு இப்படி பேசி இருக்கிறார். பாம்பும் சாகக்கூடாது  பிரம்பும் உடையக்கூடாது இது தான் ரஜினி காந்தின் நிலைப்பாடு.