திமுக தலைவர் கருணாநிதி தற்போது காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நிலையில்  சரியாக 9:50 க்கு வெளியான இந்த அறிக்கையில், முதல் வரியிலேயே பின்னடைவு என குறிப்பிட்டுள்ளனர்.  உடல் நிலையில்  பின்னடைவு என அறிக்கையில் குருப்பிட்டிருந்தாலும், மருத்துவ உபகரணங்கள் உதவியோடும் , மருத்துவ நிபுணர்கள் உதவியோடு சிகிச்சை தொடர்ந்து வருகிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.   பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் திமுக தொண்டர்கள் குவிந்துள்ளனர்.

இதனால் அங்கு போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.  ஆயுதப்படை காவலர்கள் அரை மணி நேரத்தில் ராஜாஜி ஹால் , ராஜ ரத்தினம் ஸ்டேடியம் , பகுதிகளில் ஆஜராக வேண்டும் என காவல் துறை உயரதிகாரிகள் உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது.

சென்னையில் எல்டாம்ஸ் சாலையில் இருந்து மருத்துவமனை வரை உள்ள கடைகள் அடைப்பு, காவேரி மருத்துவமனையை சுற்றிய கடைகளை அடைக்க போலீஸார் உத்தரவு,  அதேபோல, மாநகரில் உள்ள அனைத்து காவல் நிலைய காவலர்களும் தயார் நிலையில் இருக்க வேண்டும் எனவும்  கட்டுப்பாட்டு அறையில் இருந்து உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், சேலத்தில் அரசு  நிகழ்ச்சிகளுக்கு சென்ற முதனலமிச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை நடக்கவிருந்த நிகழ்சிகளை திடீரென  ரத்து செய்து விட்டு அவசர அவசரமாக சென்னைக்கு விமானம் மூலம் வருகிறார். கோவையிலிருந்து 11:45 விமானத்தில் வருகிறார்.