Asianet News TamilAsianet News Tamil

காற்றின் திசைவேகம் மாறுபாடு.. அடுத்த 24 மணி நேரத்திற்குள் இந்த 3 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை.

தென் கடலோர மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், வட கடலோர மாவட்டங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

Variation of wind speed .. Thundershowers and thundershowers in these 3 districts during the next 24 hours.
Author
Chennai, First Published Dec 31, 2020, 2:02 PM IST

காற்றின் திசைவேகம் மாறுபாடு காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு திருப்பூர், நாமக்கல், கரூர், திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழையும். தென் கடலோர மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், வட கடலோர மாவட்டங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. 

Variation of wind speed .. Thundershowers and thundershowers in these 3 districts during the next 24 hours.

1-1-2021 கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவையில் ஒரு சில இடங்களில் லேசான மழையும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 2-1 2021 கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் லேசான மழையும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையும் நிலவும் என கூறப்பட்டுள்ளது. 3-1-2021, 4-1-2021 தேதிகளில் தென் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், ஏனைய மாவட்டங்களில் வறண்ட வானிலையும் நிலவும். 

Variation of wind speed .. Thundershowers and thundershowers in these 3 districts during the next 24 hours.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொருத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். அதிக வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ்சை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸ் ஆகவும் இருக்கும். அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸ் ஆகவும் இருக்கும். 

Variation of wind speed .. Thundershowers and thundershowers in these 3 districts during the next 24 hours.

கடந்த 24 மணி  நேரத்தில் அதிகபட்சமாக கொள்ளிடம், (நாகப்பட்டினம்) 9 சென்டிமீட்டர் மழையும்,  திண்டிவனம் (விழுப்புரம்) 7 சென்டிமீட்டர் மழையும், செஞ்சி மரக்காணம் (விழுப்புரம்) தல 6 சென்டி மீட்டர் மழையும், ஆடுதுறை, (தஞ்சாவூர்) செய்யூர், (செங்கல்பட்டு) விளாத்திகுளம் (தூத்துக்குடி) தலா 5 சென்டி மீட்டர் மழையும், ராமேஸ்வரம், கடலூர், பாண்டிச்சேரி தலா 4 சென்டி மீட்டர் மழையும் பதிவாகி உள்ளது. டிசம்பர் 31 மற்றும் ஜனவரி 1 ஆகிய தேதிகளில் குமரி கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். எனவே மீனவர்கள் மேற்கூறிய பகுதிகளுக்கு எச்சரிக்கையுடன் செல்ல அறிவுறுத்தப்படுகிறார்கள் என அதில் எச்சரிக்கப்பட்டுள்ளது. 

 

Follow Us:
Download App:
  • android
  • ios