மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் எம்.எல்.ஏ கருணாஸை தி.மு.க எம்.எல்.ஏ, ஜெ.அன்பழகன் சந்தித்ததை மிகக் கடுமையாக விமரிசிக்கிறார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் வன்னி அரசு.

’’நடிகரும் எம்எல்ஏவுமான கருணாசின் பேச்சாக இருக்கட்டும் அதன் பிறகு பிரபல தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியாக இருக்கட்டும்  எல்லாமே சாதிவெறியை ஞாயப்படுத்துவதாகவே அமைந்துள்ளது. அது மட்டுமல்லாது குடிக்கிறது தப்பு இல்லை என்றும் குடிக்கிறதுக்காக தினமும் 1 லட்சம் செலவு பண்ணுவதாகவும் பெருமையோடு சொல்லுகிறார்.

வன்முறையை தூண்டும் வகையில் “வெட்டுவேன் குத்துவேன்”என்று கொஞ்சம் கூட வெட்கமே இல்லாமல் பேசுகிறார். அப்படிப்பட்ட மோசமான பேர்வழியை திமுக சார்பில் ஜெ.அன்பழகன் சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளார். இந்த சந்திப்பு நல்ல அணுகுமுறையல்ல. ஒரு சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் அரசியல் சட்ட அமைப்புக்கு கட்டுப்பட்டு செயல்பட வேண்டும். ஆனால் கருணாசின் பேச்சும் பேட்டியும் அருவருக்கதக்கதாகும்.

திமுக சார்பில் கருணாசை சந்தித்ததன் மூலம் கருணாசின் பேச்சை ஆதரிக்கிறார்களா என்ற கேள்வி எழுகிறது. சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை பறிக்க கூடாது என்று அன்பழகன் பேட்டி வேறு கொடுத்துள்ளார். கருணாசின் இந்த பேச்சுக்காகவே அவரின் பதவியை பறித்திருக்க வேண்டும்.

திமுக இதற்காகத்தான் குரல் கொடுத்திருக்க வேண்டும். ஆனால் திமுகவின் செயல்பாடு நம்பிக்கை இழக்கிறது. இது குறித்து தி.மு.க விளக்குமா? என்று விளாசுகிறார் வன்னி அரசு,