Asianet News TamilAsianet News Tamil

அப்பாடா.. வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு கிடைக்காதது ரொம்ப சந்தோஷம்.. ஆரவாரமாக வரவேற்கும் கருணாஸ்.!

இதை மதுரை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. இதை அனைத்து சமுதாயத்தினர் சார்பிலும் வரவேற்கிறேன். சமூக நீதி நிலைக்க, தமிழக அரசு மேல்முறையீடு செய்யாமல் இருப்பதே அனைத்து சமுதாய மக்களை நல்வழிப்படுத்தச் சரியாக இருக்கும் என்பது எனது கருத்து. 

vanniyar reservation cancellation happy..Karunas
Author
Madurai, First Published Nov 3, 2021, 3:34 PM IST

சமூக நீதி நிலைக்க வன்னியர் இட ஒதுக்கீடு ரத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்யக்கூடாது என கருணாஸ் வலியுறுத்தியுள்ளார்.

வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கிய சட்டம் ரத்து செய்யப்படுவதாக உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி தீர்ப்பு வழங்கியது. இது அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிராக, சட்டப்பேரவை தேர்தலை கருத்தில் கொண்டு அவசர, அவரசமாக சட்டம் இயற்றப்பட்டுள்ளது என்று நீதிமன்றமே அதிருப்தியை வெளிப்படுத்தியது. இந்நிலையில், உயர்நீதிமன்ற மதுரைக்கிளையின் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு விவகாரம் தொடர்பாக தமிழக அரசு மேல்முறையீடு செய்யக்கூடாது என கருணாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதையும் படிங்க;- எக்ஸ்ட்ரா காசு வாங்குற? 5 பஸ்களை பறிமுதல் செய்த ராஜகண்ணப்பன்.. ஆடிப்போன ஆம்னி ஓனர்கள்..!

vanniyar reservation cancellation happy..Karunas

இந்நிலையில், மதுரை விமான நிலையத்தில் முன்னாள் எம்எல்ஏவும், முக்குலத்தோர் புலிப்படைக் கட்சியின் தலைவருமான கருணாஸ்  செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;- அதிமுக ஆட்சியில் அவசரமாகக் கொண்டுவரப்பட்டது வன்னியர்களுக்கான 10.5 சதவீத உள் இட ஒதுக்கீடு. இதை மதுரை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. இதை அனைத்து சமுதாயத்தினர் சார்பிலும் வரவேற்கிறேன். சமூக நீதி நிலைக்க, தமிழக அரசு மேல்முறையீடு செய்யாமல் இருப்பதே அனைத்து சமுதாய மக்களை நல்வழிப்படுத்தச் சரியாக இருக்கும் என்பது எனது கருத்து. 

இதையும் படிங்க;- ஆடிட்டர் குருமூர்த்தி மீதான புகார்.. ஆறப்போட்ட அதிமுக.. அதிரடி காட்டிய திமுக..!

vanniyar reservation cancellation happy..Karunas

சாமானிய மக்கள் நீதிமன்றத்தின் மீது வைத்துள்ள நம்பிக்கையை இந்தத் தீர்ப்பு உறுதி செய்கிறது. சுதந்திரத்திற்குப் போராடி, நீண்ட நாட்கள் சிறையில் இருந்த முத்துராமலிங்கத் தேவர் பெயரை மதுரை விமான நிலையத்திற்கு வைக்கக் கோரி, தொடர்ந்து கோரிக்கை வைக்கப்படுகிறது. 

இதையும் படிங்க;- அதிமுக சுக்குநூறாய் தகர்ந்துவிடும்... எடப்பாடி -சசிகலாவுக்கு ஜெ. உதவியாளர் எச்சரிக்கை..!

இதற்காக மத்திய அரசிற்கு திமுக அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும். பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மத்திய அரசிற்கு அழுத்தம் கொடுப்பதாக தெரிவித்துள்ளார். இதற்காக மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கவேண்டும். சசிகலாவை அதிமுகவில் சேர்ப்பது என்பது அவர்களது கட்சி விவகாரம். அதுபற்றி நான் பேச விரும்பவில்லை என கருணாஸ் தெரிவித்துள்ளார். 

Follow Us:
Download App:
  • android
  • ios