தங்கச்சியே ஓரங்கட்டிய நீங்க எல்லாம் பாலின சமத்துவத்தை பற்றி பேசலாமா? ஸ்டாலினை டோட்டல் டேமேஜ் செய்த பாஜக.!

கருணாநிதியால் அரசியலால் அடையாளப்படுத்தப்பட்ட கனிமொழி, பெண் என்பதாலேயே திமுகவில் ஓரங்கப்பட்டுள்ளனர். ஆட்சிக்கும், கட்சிக்கும் தலைமை தாங்கும் அளவுக்கு திறமை இருந்தும், அவருக்கு பத்தோடு பதினொன்றாக துணைப் பொதுச்செயலர் பதவிதான்.

Vanathi Srinivasan responded to CM Stalin tvk

ஜனநாயகத்திற்கும், சமத்துவத்திற்கும் எதிரான வாரிசு அரசியலில்கூட, பெண்களை ஒதுக்கி விட்டு ஆண் வாரிசுக்கு மட்டுமே மகுடம் சூட்டியவர்கள்தான் இன்று பாலின சமத்துவம் பற்றி பேசுகிறார் என முதல்வர் ஸ்டாலினுக்கு வானதி சீனிவாசன் பதிலடி கொடுத்துள்ளார். 

இதுதொடர்பாக பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும் கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏவுமான வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில்;- நாடாளுமன்றத்திலும், மாநில சட்டமன்றங்களிலும் மகளிருக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு அளிக்க வகை செய்யும் வரலாற்று சிறப்புமிக்க சட்ட மசோதாவை, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், கடந்த 9 ஆண்டுகளாக மகளிர் இட ஒதுக்கீட்டு சட்டத்தை ஏன் கொண்டு வரவில்லை? என கேள்வி எழுப்பியுள்ளார்.

இதையும் படிங்க;- இந்த நாடகத்தை நிறுத்துங்க! உங்க நண்பர்கள் கிட்ட சொல்லி தண்ணீர் திறந்துவிட சொல்லுங்க! முதல்வரை சீண்டும் வானதி.!

Vanathi Srinivasan responded to CM Stalin tvk

அதுமட்டுமல்லாது, "சாதி வேறுபாடுகளற்ற சமத்துவமும், பாலின சமத்துவமும் நாகரிக சமூகத்தின் அடையாளங்கள். பாலின சமத்துவம் என்பது அனைத்து வகையிலும், அனைத்து இடங்களிலும் பெண்களுக்கு உரிய அதிகாரத்தை வழங்குவதாகும். காலம் கடந்து செய்தாலும், கண் துடைப்புக்காக செய்தாலும் மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை திமுக சார்பில் ஆதரிக்கிறேன்" என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். ஆனால், ஸ்டாலின் தலைவராக உள்ள திமுகவிலும், அவர் முதலமைச்சராக உள்ள தமிழக அரசிலும் பாலின சமத்துவமும் இருக்கிறதா என்றால், மனசாட்சி உள்ள யாரும் இல்லை என்றே சொல்வார்கள். கருணாநிதியால் அரசியலால் அடையாளப்படுத்தப்பட்ட கனிமொழி, பெண் என்பதாலேயே திமுகவில் ஓரங்கப்பட்டுள்ளனர். ஆட்சிக்கும், கட்சிக்கும் தலைமை தாங்கும் அளவுக்கு திறமை இருந்தும், அவருக்கு பத்தோடு பதினொன்றாக துணைப் பொதுச்செயலர் பதவிதான்.

Vanathi Srinivasan responded to CM Stalin tvk

அதுபோல, முதலமைச்சர் ஸ்டாலினுக்கு மகள் இருந்தும், மகனைத்தான் அரசியலுக்கு கொண்டு வந்து திமுக இளைஞரணிச் செயலாளராக, அமைச்சாரக்கியுள்ளார். ஜனநாயகத்திற்கும், சமத்துவத்திற்கும் எதிரான வாரிசு அரசியலில்கூட, பெண்களை ஒதுக்கி விட்டு ஆண் வாரிசுக்கு மட்டுமே மகுடம் சூட்டியவர்கள்தான் இன்று பாலின சமத்துவம் பற்றி பேசுகிறார்கள். எல்லாம் வெறும் பேச்சு மட்டுமே. முதலமைச்சரையும் சேர்த்து 35 பேர் கொண்ட திமுக அமைச்சரவையில் இருவர் மட்டுமே பெண்கள். அமைச்சரவை பட்டியலில் 35-வது இடத்தில் அதுவும் கடைசி இடத்தில் இருப்பவர் பெண் அமைச்சர் கயல்விழி. அவர் பட்டியலினத்தைச் சேர்ந்தவர். இப்படி அமைச்சரவையில் பெண்களுக்கு உரிய பிரதிநித்துவம் அளிக்காமல், பட்டியலின பெண் அமைச்சரை கடைசி இடத்தில் வைத்துவிட்டு, கொஞ்சமும் கூசாமல், பாலின சமத்துவம் பற்றி மற்றவர்களுக்கு பாடம் எடுக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.

இதையும் படிங்க;-  கூட்டணியை பொறுத்த வரை நான் சொல்ற பதில் இதுதான்.! திமுகவிற்கு சாமி, கோவில் என்றாலே அலர்ஜி.! வானதி சீனிவாசன்.!

Vanathi Srinivasan responded to CM Stalin tvk

ஆனால், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய பாஜக அமைச்சரவையில் 11 பெண்கள் உள்ளனர். நிதி போன்ற முக்கிய துறைகளின் அமைச்சர்களாகவும் பெண்கள் உள்ளனர். மாநில ஆளுநர்களாகவும் பெண்கள் பலர் நியமிக்கப்பட்டுள்ளனர். பாலின ரீதியாக ஒடுக்கப்பட்ட பெண்களுக்கு அரசியல் அதிகாரம் அளிப்பதுதான் பாலின சமத்துவம். பெண்களுக்கு தேவையானதை அவர்களே செய்து கொள்ளும் அதிகாரத்தை அளிப்பது சமூக நீதி. இவற்றை செய்யாமல், பாலின சமத்துவம், சமூக நீதி என பேசிக் கொண்டே, பெண்களுக்கான அதிகாரத்தை மறுக்கிறது திமுக.

Vanathi Srinivasan responded to CM Stalin tvk

திமுக என்பது வாரிசு, ஊழலில் திளைக்கும் கட்சி. வாரிசு என்றாலே அங்கு ஆணாதிக்கம் வந்துவிடும். பெண்களுக்கு உரிமை மறுக்கப்படும். எனவே, மகளிர் இட ஒதுக்கீடு சட்டத்தை கொண்டு வந்ததால், இந்திய வரலாற்றில் மகத்தான இடத்தை பிடித்ததோடு, மக்கள் தொகையில் சரி பாதியாக உள்ள பெண்களின் மனங்களையும் பிரதமர் மோடி வென்றுள்ளார். இதை பொறுக்க முடியாமல் வழக்கம்போல, வன்மத்தை கக்கியுள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின். முடிந்தால் திமுக கட்சி, ஆட்சியில் பெண்களுக்கு உரிய முக்கியத்துவமும், அதிகாரமும் வழங்கட்டும். அவர் என்னதான் செய்தாலும், 2024ல் நரேந்திர மோடி மூன்றாவது முறையாக பிரதமர் ஆவதை தடுக்க முடியாது என வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios