தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பாஜகவை சேர்ந்த வானிதி சீனிவாசன், காந்தி, சரஸ்வதி, நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட 4 பேர் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டனர்.

பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான வானதி சீனிவாசன் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு திமுகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பாஜகவை சேர்ந்த வானிதி சீனிவாசன், காந்தி, சரஸ்வதி, நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட 4 பேர் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டனர். ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்றதில் இருந்து திமுக- பாஜக இடையே உச்சக்கட்ட மோதல் ஏற்பட்டு வருகிறது. இதன் காரணமாக ஒருவர் மீது ஒருவர் மாறி மாறி புகார் தெரிவித்து வருகின்றனர். 

இந்நிலையில், கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏவாகவும், தேசிய மகளிரணி தலைவராக பதவி வகித்து வரும் வானதி சீனிவாசன் திமுகவில் இணைய உள்ளார் என சவுக்கு சங்கர் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இதுதொடர்பாக பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் அவரது டுட்டர் பக்கத்தில்;- கட்சி தலைமை தொடர்ந்து புறக்கணித்து வருவதால் பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு திமுகவில் சேர வாய்ப்புள்ளதாக கூறியுள்ளார். 

வானதி சீனிவாசனை திமுக பக்கம் இழுக்கும் டீலை அமைச்சர் செந்தில் பாலாஜி பேசி வருவதாகவும், இந்த டீல் ஓகேவானால் வானதி சீனிவாசனுக்கு முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் நிச்சயம் இடம் அளிக்கப்படும் என்றும் திமுக தரப்பில் உறுதி அளிக்கப்பட்டுள்ளதாக அதில் தெரிவித்துள்ளார்.

மேலும், விஷ்வ ஹிந்து பரிஷத் வடதமிழகத்தின் தலைவர் பதவியில் இருந்து தமது கணவர் சு.சீனிவாசன் அண்மையில் நீக்கப்பட்டதால், ஆர்எஸ்எஸ் அமைப்பின் மீதும் வானதி சீனிவாசன் கோபத்தில் இருப்பதாக அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.

Scroll to load tweet…

பாஜகவின் தேசிய மகளிர் தலைவராக வானதி சீனிவாசன் உள்ளார். மேலும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வலது கரமாகவும் செயல்பட்டு வருகிறார். எனவே திமுகவில் இணைவது என்பது கேள்விக்குறியே. ஆனால், வானதி சீனிவாசன் தரப்பில் இருந்தோ இதுவரை எவ்வித மறுப்பு செய்தியும் வரவில்லை.