Asianet News TamilAsianet News Tamil

அண்ணன் எடப்பாடியார்னு அழுத்தி சொன்ன வளர்மதி.. ஓபிஎஸ்சை ஊறுகாவாகூட மதிக்கல.. தலைவன் இருக்கிறான் டயலாக் வேற..

அதிமுக பொதுக்குழு கூட்டம் இன்று நடந்த நிலையில் வரவேற்புரை ஆற்றிய முன்னாள் அமைச்சர் வளர்மதி, எடப்பாடி பழனிச்சாமியை அண்ணன் எனக் கூறி அவரது அனைத்து பதவிகளையும் பட்டியலிட்ட அவர், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் பெயரை குறிப்பிடாமல் புறக்கணித்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

 

Valarmati who mentioned her brother Edappadiyar .. Not respected to OPS...
Author
Chennai, First Published Jun 23, 2022, 9:05 PM IST

அதிமுக பொதுக்குழு கூட்டம் இன்று நடந்த நிலையில் வரவேற்புரை ஆற்றிய முன்னாள் அமைச்சர் வளர்மதி, எடப்பாடி பழனிச்சாமியை அண்ணன் எனக் கூறி அவரது அனைத்து பதவிகளையும் பட்டியலிட்ட அவர், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் பெயரை குறிப்பிடாமல் புறக்கணித்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பலமுறை  அன்புக்குரிய அண்ணன் எடப்பாடி பழனிச்சாமி என குறிப்பிட்டு பேசிய அவர் ஒருமுறைகூட ஓபிஎஸ் என் பெயரை உச்சரிக்க வில்லை, இது அதிமுக தொண்டர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. 

ஆரம்பம் முதலே ஒற்றை தலைமை வேண்டும் என எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இன்று நடைபெற்ற பொதுக்குழுவில் எப்படியாவது எடப்பாடி பழனிச்சாமியை கட்சியின் பொதுச் செயலாளராக  நியமித்து விட வேண்டுமென திட்டமிட்டிருந்தனர். ஆனால் ஏற்கனவே வரையறுத்துள்ள 23 தீர்மானங்களை தவிர புதிய தீர்மானங்கள் எதையும் நிறைவேற்ற கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அந்த உத்தரவுடன் உற்சாகமாக பொதுக்குழுவில் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் கலந்து கொண்டார்.

Valarmati who mentioned her brother Edappadiyar .. Not respected to OPS...

நீதிமன்ற உத்தரவால் தங்கள் திட்டம் தகர்ந்து போனதே எண்ணி எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அவரது ஆதரவாளர்கள் உச்சகட்ட கொந்தளிப்பில் இருந்தனர். பொதுக்குழுவில் அதை ஓ.பன்னீர்செல்வம் தரப்பினருக்கு எதிராக அவர்கள் வெளிப்படுத்தவும் செய்தனர். இதனால் பொதுக்குழு தொடங்கியது முதல் இருந்தேன் சலசலப்பு, சச்சரவு, கூச்சல், குழப்பம் என இருந்தது. அதற்கு மத்தியில் வரவேற்புரை ஆற்றிய முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி, எடப்பாடி பழனிச்சாமி அண்ணன் எடப்பாடி பழனிச்சாமி என அழுத்தி அழுத்தி கூறிய நிலையில் ஒரே ஒருமுறை கூட ஓ பன்னீர் செல்வத்தின் பெயரை குறிப்பிடவில்லை.

முழு விவரம் பின்வருமாறு:- பொதுக்குழு கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும் அதிமுக மகளிரணி செயலாளருமான வளர்மதி வரவேற்புரையாற்றினார். அப்போது பேசிய அவர், வரலாற்றுச் சிறப்புமிக்க செயற்குழு, பொதுக்குழு கூட்டத்திற்கு தலைமை பொறுப்பு ஏற்றுள்ள கட்சியின் அவைத்தலைவர், கழகத்தின் இணை ஒருங்கிணைப்பாளர், தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர், எதிர்க்கட்சித் தலைவர் அண்ணன் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் வருகை தந்துள்ளார். மேலும் வருகை தந்துள்ள ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர்களே, தலைமைக் கழக நிர்வாகிகள் செயற்குழு பொதுக்குழு உறுப்பினர்களுக்கு வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

Valarmati who mentioned her brother Edappadiyar .. Not respected to OPS...

காலையிலிருந்து நீங்கள் எல்லாம் இங்கு வந்துள்ளீர்கள் எனக்கூறி அவர், இதை பார்த்தால் எம்ஜிஆர் பாடல் தான் ஞாபகம் வருகிறது என்றார். "என்னதான் நடக்கும் நடக்கட்டுமே இருட்டினில் நீதி மறையட்டுமே தன்னாலே வெளிவரும் தயங்காதே ஒரு தலைவன் இருக்கிறான் மயங்காதே" என குறிப்பிட்டு அந்த தலைவன் இருக்கிறான் வருவான் வெளியே வருவான் வெகுவிரைவில் வருவான் என குறிப்பிட்டார். எடப்பாடி பழனிச்சாமியைதான் அவர் அவ்வாறு குறிப்பிட்டார் என்பதை  உணர்ந்த எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர்கள் அதற்கு கைதட்டி ஆரவாரம் செய்தனர்.

ஓ.பன்னீர் செல்வத்தை மேடையில் வைத்துக் கொண்டு அவர் இவ்வாறு பேசியது  ஓபிஎஸ்-க்கு காயத்தை ஏற்படுத்தியது. ஏற்கனவே ஒற்றை தலைமை விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தி வரும் நிலையில் பா.வளர்மதி ஓபிஎஸ் பெயரை குறிப்பிடாமல் அவரை அவமதிக்கும் வகையில் நடந்து கொண்டது விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. 

 

Follow Us:
Download App:
  • android
  • ios