Asianet News TamilAsianet News Tamil

வாஜ்பாய் கவலைக்கிடம்?

Vajpayee health condition stable
Vajpayee health condition stable
Author
First Published Jun 12, 2018, 2:02 PM IST


முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் ஒரு சிறுநீரகம் மற்றும் நுரையீரலின் செயல்பாட்டுத் திறம் மிகவும் குறைந்திருப்பதால் அவரது உடல்நிலை மோசமாக உள்ளது எஅவும் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக செய்திகள் உலாவருகின்றன. அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருவதாகவும் எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் நேற்று டெல்லியிலுள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் மருத்துவப் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டார். இது வழக்கமாக நடைபெறும் மருத்துவப் பரிசோதனைதான் என்றும், வாஜ்பாய் நலமாக உள்ளார் என்றும் எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் எய்ம்ஸ் மருத்துவமனை நேற்றிவு மீண்டும் வெளியிட்டுள்ள அறிக்கையில், "வாஜ்பாய்க்குப் பரிசோதனை செய்ததில் அவருக்கு சிறுநீர் பாதை தொற்று இருப்பது தெரியவந்துள்ளது. எனவே அதற்குரிய சிகிச்சைகள் அளிக்கப்பட்டுவருகின்றன. அவரது உடல்நிலையை மருத்துவக் குழு தீவிரமாகக் கண்காணித்துவருகிறது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நேற்றிரவு சென்ற பிரதமர் நரேந்திர மோடி, அங்கு வாஜ்பாயைச் சந்தித்து நலம் விசாரித்தார். 50 நிமிடங்கள் வரை அங்கிருந்த பிரதமர், வாஜ்பாயின் உடல்நிலை குறித்து அவரது குடும்பத்தினரிடமும் மருத்துவர்களிடமும் கேட்டறிந்தார். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பாஜகவின் மூத்த தலைவர் அத்வானி, தலைவர் அமித் ஷா உள்ளிட்டோரும் வாஜ்பாயைச் சந்தித்து நலம் விசாரித்துள்ளனர்.

வாஜ்பாய் உடல்நிலை குறித்து டைம்ஸ் ஆப் இந்தியா ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில், “வாஜ்பாயின் ஒரு சிறுநீரகம் மற்றும் நுரையீரலின் செயல்பாட்டுத் திறம் மிகவும் குறைந்திருப்பதால் அவரது உடல்நிலை மோசமாக உள்ளது" என்று குறிப்பிட்டுள்ளது. எய்ம்ஸ் மருத்துவமனை வட்டாரங்களில் விசாரித்தபோது இந்த தகவல் கிடைத்ததாக டைம்ஸ் ஆப் இந்தியா தெரிவித்துள்ளது.

இந்நிலையில், இன்று எய்ம்ஸ் மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கை, "வாஜ்பாய் உடல்நிலை சீராக உள்ளது. ஊசி மூலம் செலுத்தப்படும் ஆண்டிபயாடிக்குகளுக்கு அவரது உடல் எதிர்வினையாற்றுகிறது. அவரது உறுப்புகள் சீராக இயங்குகின்றன. நோய் தொற்று கட்டுப்படுத்தபடும் வரை அவர் மருத்துவமனையில் இருப்பார்" என்று குறிப்பிட்டுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios