இபிஎஸ்யிடம் பணமும், திமிறும் உள்ளது.! கொள்ளையடிக்கும் கூட்டத்தின் தலைவனாக எடப்பாடி..! வைத்தியலிங்கம் ஆவேசம்
தங்கள் அணியின் பலம் என்ன என்பதை காட்ட தயாராக உள்ளோம், திருச்சியில் மாநாடு நடத்த வாய்ப்பு தாருங்கள் என முன்னாள் அமைச்சர் வைத்தியலிங்கம், ஓபன்னீர் செல்வத்திடம் கோரிக்கை விடுத்தார்.
கொள்ளைடிக்கும் கூட்டத்தின் தலைவர் இபிஎஸ்
சென்னை எழும்பூரில் உள்ள தனியார் விடுதியில் ஓபிஎஸ் அணியின் மாவட்ட செயலாளர்கள் மற்றும் தலைமை கழக நிர்வாகிகள் கூட்டம் அந்த அணியின் அரசியல் ஆலோசகர் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது .கூட்டத்தில் உரையாற்றிய முன்னாள் அமைச்சர் வைத்தியலிங்கம், ஓபிஎஸ் அணியில் பலம் என்ன என கேள்வி எழுப்புகிறார்கள், திருச்சியில் மாநாடு நடத்த வாய்ப்பு தாருங்கள். நம் பலத்தை நிரூபித்து காட்டுகிறோம் என தெரிவித்தார். அதிமுக என்ற இயக்கத்தை கொள்ளையடிக்கும் கூட்டத்தின் தலைவனாக எடப்பாடி இருப்பதாக விமர்சித்தவர், இயக்கம் ஒன்றாக இருக்க வேண்டும் என்பது தான் ஓ.பன்னீர்செல்வத்தின் எண்ணம் என தெரிவித்தார். ஓ.பன்னீர்செல்வத்தின் எண்ணத்திற்கு உறுதுணையாக நாம் அனைவரும் இருக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
யாரிடம் இரட்டை இலை
இரட்டை இலை சின்னம் எடப்பாடி பக்கம் போய் விட்டது என்று ஒரு சிலர் உணர்ச்சிவசப்படுகிறார்கள். தேர்தல் விதிப்படி இரட்டை இலை சின்னம் ஒருங்கிணைப்பாளருக்கு தான் கிடைக்கும். உச்ச நீதிமன்றம் இடைக்கால பொதுச் செயலாளர் என்ற முறையில் எடப்பாடி பழனிசாமியை ஏற்றுக்கொள்ளவில்லை. ஒருங்கிணைப்பாளராக உள்ள ஓபிஎஸ் பெயரை குறிப்பிடவில்லை. அவைத்தலைவராக உள்ள தமிழ் மகன் உசேன் முன் நின்று படிவங்ககில் கையெழுத்திடலாம் என்றே உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கி இருக்கிறது. இதனை தொண்டர்கள் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். எடப்பாடி பழனிசாமியிடம் இரண்டு இருக்கிறது. ஒன்று பணம், இன்னொன்று திமிறு என கூறியவர், எடப்பாடி பழனிசாமிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்,
இயக்கத்தை காப்பாற்ற வேண்டும்
இதனை மக்கள் நிச்சயம் செய்வார்கள் என தெரிவித்தார். இதனை தொடர்ந்து பேசிய ஜே .சி. டி. பிரபாகரன், இது தொண்டர்களின் இயக்கம், ஆயிரமாயிரமாண்டு ஆனாலும் அதிமுகவை அழிக்க முடியாது என ஜெயலலிதா சொன்னார். தொண்டர்களை நம்பித்தான் ஜெயலலிதா அப்படி சொன்னார். தொண்டர்களை மதிக்காத இயக்கமாகத்தான் தற்போது அதிமுக இருக்கிறது.தொண்டர்களின் இயக்கத்தை காப்பாற்ற வேண்டும் என்பது மட்டுமே ஓ பி எஸ் எண்ணம். அதுவும் தலைவராக இல்லை. தொண்டராக எண்ணுகிறார்.
ஓபிஎஸ் கையில் அதிமுக
மார்ச் மாதம் முடிந்து ஏப்ரல் காலம் தொடங்கும் போது அதிமுக ஓ.பன்னீர்செல்வம் கையில் இருக்கும். நாடாளுமன்ற தேர்தலுக்கான பணிகளை துவங்குங்கள்ஓ.பி.எஸ் இறுதிவரை போராடுவார். அவருக்கு நாம் தோளோடு தோள் நிற்க வேண்டும். இரட்டை இலை சின்னம் இல்லயே என்ன செய்ய போகிறோம் என நீங்கள் நினைக்கலாம். கண்டிப்பாக ஓ.பி.எஸ் இறுதிவரை போராடுவார், சர்வாதிகாரத்தை எதிர்த்து வெற்றி பெறுவார். கட்சி சட்ட விதியின்படி ஜெயலலிதா தான் நிரந்தர பொது செயலாளர் அதை உறுதி செய்வோம் என கூறினார்.
இதையும் படியுங்கள்
தமிழக மாணவர்கள் மீது தாக்குதல்..!ஏபிவிபி அமைப்பின் கோழைத்தனமான செயல்- இறங்கி அடிக்கும் மு.க.ஸ்டாலின்