மீடூ மூலம் கவிஞர் வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டை வீசிய பாடகி சின்மயி பற்ற வைத்த நெருப்பு இப்போது வரை பற்றி படர்கிறது. 

மூச்சு விடக்கூட மறந்தாலும் வைரமுத்துவை பற்றி சமூக வலைதளங்களில் சின்மயி அலறடிக்க மறப்பதே இல்லை. இந்நிலையில் எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றியது போல நக்கீரன் குழும சினிமா இதழான சினிக்கூத்து இதழில் நடிகை சமந்தா நீருக்கு மேல் படர்ந்த மறத்தில் கவர்ச்சியாக சாய்ந்தபடி படுத்துக் கிடக்கும் போட்டோவை போட்டு’’ நீதி மேட்டர்ல ‘வெடை’க்குது சின்மயிங்கிற ‘பார்ட்டி’ பொள்ளாச்சி மேட்டர் வந்தப்ப இப்படி குப்புறடிச்சு எங்க ‘விழுந்து’ கெடந்துச்சோ’ என  கமெண்ட் போட்டு சின்மயியை வம்பிற்கு இழுத்துள்ளது. 

இதனை பார்த்து கொதித்தெழுந்த சின்மயி தனது ட்விட்டர் பக்கத்தில், திரு.நக்கீரன் கோபால் ஏன் என் மீது இத்தனை  குரூரமாக இருக்கிறார். அவர் ஏன் இப்படி வக்கிரபுத்தியுடன் இருக்கிறார். நீங்கள் வைரமுத்துவுக்கு சிறந்த நண்பராக இருக்கிறீர்கள். அவருடைய கதைகள் அனைத்தும் உங்களுக்கு தெரியாதா?  இத்தகைய தவறான எண்ணம் கொண்ட வைரமுத்துவை தமிழ்நாட்டில் தட்டிக் கேட்க யாருக்கும் முதுகெலும்பாக இல்லை’’என பதிலடி கொடுத்துள்ளார். 

 

அந்த ட்விட்டின் கீழே கமெண்ட் ஒன்றை பதிவிட்டுள்ள அவர், ‘இத்தன நாள்ல ஏர்போர்ட்ல இருந்து வீடு வரைக்கும் என்ன துரத்தி இப்படி தடவினாரா அப்படி ஒரசினாரா, இப்ப ஏன்டி சொல்றன்னு பாப்பார நாயேன்னு கேக்க முடிஞ்ச சில நபர்களுக்கு திரு வைரமுத்து அவர்களை ஒரு கேள்வி கூட கேக்க முடியல. அது யேனோ?? :) 
ஆக, சில பேர் சப்போர்ட் இருந்தா இன்னா வேணா பண்ணலாம்’’ எனத் தெரிவித்துள்ளார். இதற்கு கலவையான கமெண்டுகள் சூடாக பதிவிட்டப்பட்டு வருகின்றன.