Vaikos autonomy scandal and the Kovilpatti panchayat with him

மாநில சுயாட்சி தத்துவம் எந்த நிலையிலும் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் துல்லியமாக இருக்கும் திராவிட தலைவர்களில் மிக முக்கியமானவர் வைகோ. இதற்காக தான் ஏறும் மேடைகளில் எல்லாம் தீரமாக முழங்குபவர். 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

அப்பேர்ப்பட்ட வைகோ, கோயமுத்தூரில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் அரசு அதிகாரிகளை வைத்து ஆய்வுக் கூட்டம் நடத்திய விவகாரத்தை விட்டுவைப்பாரா? மனிதர் போட்டுப் பொளந்திருக்கிறார். 

இதுபற்றி ஆவேசப்பட்டிருக்கும் அவர் “இந்த செயலை தமிழக சுயாட்சி தத்துவத்துக்கு எதிராக விடப்பட்ட பெரும் சவாலாக பார்க்கிறேன்.

டில்லி, புதுச்சேரியில் உள்ள துணை நிலை கவர்னர்கள், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளை உதாசீனம் செய்துவிட்டு சர்வாதிகாரம் செலுத்துவது போல் தமிழக கவர்னரும் செயல்பட துவங்கியிருக்கிறார். இதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்?” என்று கேட்டிருக்கிறார். 

ஆனால் இதற்கு சில குறும்பர்கள் இணையத்தில் “இப்படியெல்லாம் பேசுறதுக்கு முன்னாடி, கோவில்பட்டியில போட்டி போடுறேன்னு கோதாவுல குதிச்சுட்டு திடீர்ன்னு கோவத்துல தேர்தல்ல இருந்து விலகுன நீங்க யோசிக்க மாட்டீங்களா? என்னா சார் உங்க நியாயம்?” என்று வம்பிழுத்திருக்கின்றனர் வைகோவிடம்.