தேமுதிகவை இனியும் நம்பி பயனில்லை என்ற முடிவோடு மற்ற கூட்டணிக் கட்சிகளுடனான தொகுதிப் பங்கீடுகளை இன்றே  முடிந்துவிட்டது திமுக. அதன் முதல் கட்டமாக இன்று காலை விசிகவிற்கு 2 இடங்கள் ஒதுக்கியுள்ளது. மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்டு, மதிமுக கட்சிகளுடனான  விரைவில்  வெளியாகும் என சொல்லபப்டுகிறது.

காங்கிரஸ் 10 தொகுதிகளில் கை சின்னத்தில் போட்டியிடுகிறது . இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஒரு தொகுதியில் ஏணி சின்னத்தில் போட்டியிடுகிறது. மார்க்ஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டுக்கு தலா 2 தொகுதிகளில் அவர்களது சின்னத்திலேயே போட்டியிடுகின்றன. ஆக மொத்தமுள்ள 40 இடங்களில் 15 இடங்களில் திமுகவின் கூட்டணிக் கட்சிகள் தங்கள் சொந்த சின்னத்தில் நிற்கின்றன.

மீதமுள்ள 25 தொகுதிகளில் 20 தொகுதிகளில் திமுகவே தன் வேட்பாளர்களை நிறுத்துகிறது. எஞ்சியுள்ள 5 தொகுதிகளில் விடுதலைச் சிறுத்தைகள் 2, மதிமுக 1, கொங்கு நாடு மக்கள் தேசியக் கட்சி 1, இந்திய ஜனநாயகக் கட்சி 1 ஆகிய கட்சிகள் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவதாக தெரிகிறது.  திமுக கூட்டணியில் 25 இடங்களில் உதயசூரியன் சின்னம் களம் காண்கிறது. 15 தொகுதிகளில் கூட்டணிக் கட்சிகளின் சின்னங்கள் களம் காண்கின்றன

இன்று திமுகவோடு இறுதிக் கட்ட பேச்சுவார்த்தையில்,  திருமா கட்சிக்கு இரு தொகுதிகளை ஒதுக்கியதோடு உதயசூரியன் சின்னத்தில்தான் நிற்கவேண்டும் என சொன்னார்களாம்,

இதேபோல், மதிமுகவும் உதயசூரியன் சின்னத்தில்தான் நிற்கும் என்றே சொல்லப்படுகிறது. மதிமுகவில் கணேசமூர்த்திக்கு ஒரு மக்களவைத் தொகுதியும், வைகோவுக்கு ராஜ்யசபா உறுப்பினர் பதவியும் கொடுப்பதாக சொல்லப்பட்டுவிட்டதாம். ஒடுக்கப்பட்ட அந்த ஒரு  தொகுதியிலும் மதிமுக உதயசூரியன் சின்னத்திலேயே நிற்க வேண்டும் என்று திமுக வலியுறுத்தி வருகிறது. 

கடந்த 27ஆண்டுகளுக்கு முன் திமுகவில் இருந்து வெளியேறிய வைகோ, மீண்டும் உதயசூரியன் சின்னத்தில் நிற்பதால் அரசியல் எதுவும் எப்போது வேண்டுமானாலும் நடக்கும் என காட்டுகிறது. கடந்த 27 வருடங்களுக்கு முன்னால் யாரால் கட்சியை விட்டு வெளியேறினாரோ அவருக்காக மீண்டும்  அதே சின்னத்தில் போட்டியிடும் சூழல் வந்துள்ளதே என புலம்புகிறார்களாம் மதிமுகவினர்.