வைகோ – திருமா மோதலில பின்னணியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர் வேலுமணி ஆகியோர் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கோவை பக்கமுள்ள ஒரு தொழிலதிபர் மூலம் இந்த உடைப்பு வேலை நடைபெற்று வருவதாக விவரமறிந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
வைகோவுக்கும்வன்னியரசுக்கும்இடையே ஏற்பட்ட மோதல் மற்றும் அதைஒட்டிதிருமாவளவன்மீதுவைகோகாட்டியகோபம் ஆகியவைதான் தமிழகத்தில் இன்றைய ஹாட் டாபிக்.
வைகோ குறித்த தனது கருத்துக்கு வன்னயரசு வருத்தம் தெரிவித்து விட்டார். திருமாவளவனும் இதற்காக வருத்தம் தெரிவித்ததுடன், வன்னியரசை கண்டித்துவிட்டதாகவும் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார் .

ஆனாலும் வைகோ இதை விடுவதாக இல்லை. திருமாவளவன்இப்பிரச்சினையைமுடித்துவைத்துவிட்டநிலையில், மீண்டும்வைகோஆரம்பித்துவைத்திருக்கிறார். மதிமுகவில்இருந்துவன்னிஅரசுக்குபதில்தெரிவித்துஒருநீண்டஅறிக்கை, ‘ஈழவாளேந்தி’ என்றபெயரில்வெளிவந்திருக்கிறது. இந்தஈழவாளேந்திவேறு யாருமல்ல வைகோதான்என்கிறார்கள்

இந்தஅறிக்கையைப்படித்ததும்ஸ்டாலின் , ‘ஏன்வைகோஇப்படிமீண்டும்மீண்டும்அதைவிடாமல்பிடித்துக்கொண்டிருக்கிறார். அவருக்குஎன்னஆயிற்று?’ என்றுகேட்டிருக்கிறார். திருமாவளவனிடமும்ஸ்டாலின்பேசியிருக்கிறார்.
வன்னியரசுவைகோவுக்குபோன்செய்துபார்த்தும்அவரதுஉதவியாளர்பிரசாந்த்தான் ஃபோனை எடுத்திருக்கிறார். ஆனால்வைகோபேசவில்லை. இதனால்அவரிடமேவருத்தம்தெரிவித்துவிட்டிருக்கிறார்வன்னியரசு.
இந்தநிலையில்வைகோமீண்டும்இப்பிரச்னையைகிளப்புவதன்மூலம்கூட்டணிக்குள்ஏதேனும்குழப்பம்ஏற்படுத்தமுயல்கிறாரோஎன்றுசந்தேகப்படுகிறாராம்ஸ்டாலின். ஏற்கனவேஅமைச்சர்வேலுமணிக்குநெருக்கமானதொழிலதிபர்மூலமாகவைகோவுடன்எடப்பாடிபழனிசாமி பேசிவருவதாகவும்ஸ்டாலினுக்குதகவல்கள்கிடைத்திருக்கிறது.

இதையடுத்து கூட்டணித் தலைவர்களை ஸ்டாலின் தனித்தனியாக போனில் தொடர்பு கொண்டு கூட்டணியின் நிலைத் தன்மை குறித்து பேசி வருகிறார் என கூறப்படுகிறது. திமுக கூட்டணியை எப்படியாவது உடைத்துவிட வேண்டும் என எடப்பாடி நினைப்பதன் விளைவே வைகோ – திருமா மோதல் என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள்.
