vaiko returns to chennai
இலங்கை தமிழர்கள் பிரச்னைகள் பற்றி ஐநா மனித உரிமைகள் ஆணையத்தில் எடுத்துரைக்க சென்ற மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சென்னை திரும்பினார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, இலங்கையில் தற்போது இருக்கும் சூழ்நிலையை நேரில் சென்று ஆய்வு செய்வதன் மூலம்தான் அறிய முடியும் என ஐநாவில் எடுத்துரைத்ததாக தெரிவித்தார்.
பொதுவாக்கெடுப்பு நடத்துவதே அங்கிருக்கும் பிரச்னைக்கு தீர்வாக அமையும். இலங்கையில் நடந்தது இனப்படுகொலை. இலங்கை பிரச்னைக்கு தனி ஈழம் மட்டுமே நிரந்தர தீர்வாக அமையும் என்பதை எல்லாம் ஐநா மனித உரிமைகள் ஆணையத்தில் எடுத்துக் கூறியதாக வைகோ தெரிவித்தார்.
என்னை மிரட்டிய சிங்களர்கள், என்னை அடித்துவிட்டதாக பொய் தகவலை இலங்கை அரசு தொலைக்காட்சிக்கு தெரிவித்துள்ளனர் என வைகோ குற்றம்சாட்டினார். மேலும் தன்னை மிரட்டிய சிங்களர்களுக்கு கண்டனம் தெரிவித்த அரசியல் கட்சித் தலைவர்களுக்கு வைகோ நன்றி தெரிவித்தார்.
