Vaiko reaction for rajainikanth speech

மத்திய, மாநில அரசுகள் மக்களுக்கு விரோதமாக கொண்டு வரும் நியூட்ரினோ, ஸ்டெர்லைம், ஹைட்ரோ கார்பன் மற்றும் மீத்தேன் போன்ற திட்டங்கள் நல்ல திட்டங்களா? அவற்றை அனுமதித்தால் தமிழ்நாடு பாலைவனம் ஆகிவிடாதா ? இவற்றை எல்லாம் எதிர்த்து போராட்டம் நடத்தாவிட்டால்தான் தமிழகம் சுடுகாடாகிவிடும் மிஸ்டர் ரஜினிகாந்த் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கடுமையாக தாக்கிப் பேசியுள்ளார்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 22 ஆம் தேதி நடந்த போராட்டம் கலவரமாக வெடித்தது. அப்போது நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் 13 அப்பாவிப் பொது மக்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

படுகாயம் அடைந்து தூத்துக்குடி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 50 க்கும் மேற்பட்ட பொது மக்களை அரசியல் கட்சியினரும், சமூக அமைப்பினரும் நேரில் சென்று பார்த்து ஆறுதல் கூறி வருகின்றனர். நடிகர் கமல்ஹாசன் உள்ளிட்ட அரசியல் கட்சியினர் மருத்துவமனைக்கு சென்று பார்த்தனர்.

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் நேற்று தூத்துக்குடி சென்று காயமடைந்தவர்களை பார்த்து ஆறுதல் தெரிவித்தார். அப்போது சந்தோஷ்குமார் என்பவர், ரஜினியைப் பார்த்து, நீங்கள் யார்? 100 நாட்களாக போராட்டம் நடத்துறோம் அப்போல்லாம் எங்பே போனீங்க ? என கேட்டு அவமானப்படுத்தினார்.

இதனால் கடுப்பான ரஜினி முகத்தை இறுக்கத்துடன் வைத்துக் கொண்டு நிருபர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், எதற்கெடுத்தாலும் போராட்டம் நடத்தினால் தமிழ்நாடே சுடுகாடாக மாறிவிடும் என்று கடுமையாக பேசினார். ரஜினியின் இந்தப் பேச்சக்கு அரசியல்வாதிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, போராட்டங்கள் மட்டுமே நமக்கு உரிமையைப் பெற்றுத்தந்துள்ளது என்றார். போராட்டங்கள் நடத்தவிலை என்றால் இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்திருக்குமா ? என கேள்வி எழுப்பினார்.

மத்திய, மாநில அரசுகள் மக்களுக்கு விரோதமாக கொண்டு வரும் நியூட்ரினோ, ஸ்டெர்லைட், ஹைட்ரோ கார்பன் மற்றும் மீத்தேன் போன்ற திட்டங்கள் நல்ல திட்டங்களா? அவற்றை அனுமதித்தால் தமிழ்நாடு பாலைவனம் ஆகிவிடாதா ? இவற்றை எல்லாம் எதிர்த்து போராட்டம் நடத்தாவிட்டால்தான் தமிழகம் சுடுகாடாகிவிடும் மிஸ்டர் ரஜினிகாந்த் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கடுமையாக தாக்கிப் பேசியுள்ளார்.