Asianet News TamilAsianet News Tamil

தேச துரோக வழக்கு... மதிமுக முகாமில் திக்..திக்... ஜூலை 5-க்கு பிறகு வேட்புமனு தாக்கல் செய்ய வைகோ முடிவு?

இந்த வழக்கில் வைகோ விடுவிக்கப்படுவார் என்று மதிமுக நிர்வாகிகளும் தொண்டர்களும் எதிர்பார்க்கிறார்கள். தீர்ப்பு சாதகமாக வரும்பட்சத்தில் 5-ம் தேதிக்கு பிறகு வைகோ வேட்புமனுத்தாக்கல் செய்ய திட்டமிட்டிருப்பதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. வேட்புமனு தாக்கல் செய்ய 8-ம் தேதிவரை காலஅவகாசம் இருப்பதால், அதன்பிறகு வேட்புமனுதாக்கல் செய்யப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
 

Vaiko plan to filing nomination onr after july 5th
Author
Chennai, First Published Jul 2, 2019, 7:16 AM IST

வைகோ மீதான தேசத் துரோக வழக்கில் தீர்ப்பு ஜூலை 5-ம் கூறப்பட உள்ள நிலையில், அதன் பிறகு மதிமுக சார்பில் மாநிலங்களவை இடத்துக்கு வேட்புமனுத்தாக்கல் செய்ய அக்கட்சி உத்தேசித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.Vaiko plan to filing nomination onr after july 5th
தமிழகத்தில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தல் ஜூலை 18-ம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதற்கான வேட்புமனுத்தாக்கல் இன்று முதல் தொடங்க உள்ளது. ஜூலை 8-ம் தேதிவரை வேட்புமனுக்கள் பெறப்பப்பட உள்ளன. வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை ஜூலை 11-ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலில் 6 பேர் மட்டுமே போட்டியிடும் நிலையில், அவர்கள் அனைவரும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்படுவார்கள்.

Vaiko plan to filing nomination onr after july 5th
திமுக சார்பில் தொமுச செயலாளர் சண்முகம், வழக்கறிஞர் வில்சன் ஆகியோர் மா நிலங்களவை தேர்தலுக்கான வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுவிட்டனர். ஓரிடம் மதிமுகவுக்கு வழங்கப்படுவதாகவும் திமுக அறிவித்துவிட்டது. அந்த இடத்துக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ போட்டியிட உள்ளார். இந்நிலையில் 10 ஆண்டுகளுக்கு முன்பு திமுக ஆட்சியில் தொடரப்பட்ட தேசத் துரோக வழக்கில் ஜூலை 5 அன்று தீர்ப்பு அளிக்கப்படும் என்று நீதிமன்றம் அறிவித்துள்ளது.Vaiko plan to filing nomination onr after july 5th
இந்த வழக்கில் வைகோ விடுவிக்கப்படுவார் என்று மதிமுக நிர்வாகிகளும் தொண்டர்களும் எதிர்பார்க்கிறார்கள். தீர்ப்பு சாதகமாக வரும்பட்சத்தில் 5-ம் தேதிக்கு பிறகு வைகோ வேட்புமனுத்தாக்கல் செய்ய திட்டமிட்டிருப்பதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. வேட்புமனு தாக்கல் செய்ய 8-ம் தேதிவரை காலஅவகாசம் இருப்பதால், அதன்பிறகு வேட்புமனுதாக்கல் செய்யப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.Vaiko plan to filing nomination onr after july 5th
அதேவேளையில் தீர்ப்பு பாதகமாக வந்தால் என்ன செய்வது என்று மாற்று ஆலோசனையிலும் வைகோ மூழ்கியிருப்பதாகவும் அக்கட்சி வட்டாரங்களில் பேசப்படுகின்றன. இதற்கிடையே ஜூலை 5 அன்று அக்கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் சென்னை வர இருப்பதாகவும் கூறப்படுகிறது.  

Follow Us:
Download App:
  • android
  • ios