Asianet News TamilAsianet News Tamil

நிர்மலா சீதாராமனை அவரது அறைக்கே சென்று சந்தித்த வைகோ.. அடுத்த நொடியே ஓ.கே சொன்ன நிதி அமைச்சர்.

தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி வட்டம் வில்லிசேரி கிராமத்தில், 4500 பேர் வசிக்கின்றார்கள். சுற்றி உள்ள, சிவஞானபுரம், வாகைத்தாவூர், காப்புலிங்கம்பட்டி, தளவாய்புரம், சத்திரப்பட்டி, இடைசெவல், சவலாப்பேரி ஆகிய கிராமங்களுக்கு மையமாக இருக்கின்றது. சுமார் 10000 மக்கள் வசிக்கின்ற பகுதி. 

 

Vaiko met Nirmala Sitharaman in her office room .. The Finance Minister accept hes demand.
Author
Chennai, First Published Dec 4, 2021, 12:32 PM IST

மறுமலர்ச்சி தி.மு.கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள், நேற்று (3.12.2021) வெள்ளிக்கிழமை மாலை 3 மணி அளவில்,நிதி அமைச்சர் நிர்மலா அவர்களை, நாடாளுமன்றக் கட்டடத்திற்கு உள்ளே இருக்கின்ற அவரது அலுவல் அறையில் சந்தித்தார்கள். அப்போது அவர் வழங்கிய கோரிக்கை விண்ணப்பம் வருமாறு...

1. தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி வட்டம் வில்லிசேரி கிராமத்தில், 4500 பேர் வசிக்கின்றார்கள். சுற்றி உள்ள, சிவஞானபுரம், வாகைத்தாவூர், காப்புலிங்கம்பட்டி, தளவாய்புரம், சத்திரப்பட்டி, இடைசெவல், சவலாப்பேரி ஆகிய கிராமங்களுக்கு மையமாக இருக்கின்றது. சுமார் 10000 மக்கள் வசிக்கின்ற பகுதி. இந்தக் கிராமங்களில் இருந்து சுமார் 600 க்கும் மேற்பட்டவர்கள், வளைகுடா நாடுகள், அமெரிக்கா, வியட்நாம், நியூசிலாந்து, மலேசியா சிங்கப்பூர் நாடுகளில் பணிபுரிகின்றார்கள். ஆண்டு வரவு செலவு 50 கோடி வரை புரள்கின்றது. எனவே, வங்கிக்குச் செல்ல வேண்டுமானால், 18 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கோவில்பட்டி அல்லது 12 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கயத்தாறு ஆகிய இடங்களுக்குச் செல்ல வேண்டும். தற்போது வில்லிசேரியில் ஒரு கூட்டுறவு சொசைட்டி மட்டுமே உள்ளது. தேசியமயம் ஆக்கப்பட்ட வங்கிக் கிளை எதுவும் இல்லை. எனவே, வில்லிசேரி கிராமத்திற்கு கனரா அல்லது ஐஓபி வங்கிக் கிளை அமைத்துத் தருமாறு கேட்டுக்கொள்கின்றேன். 

Vaiko met Nirmala Sitharaman in her office room .. The Finance Minister accept hes demand.

2. தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் வட்டம்,நடுவக்குறிச்சி 100000, வல்லராமபுரம், கே.வி.ஆலங்குளம், குத்தாலப்பேரி, அருணாசலபுரம், தர்மத்தூரணி, சூரங்குடி, புதுக்கிராமம், தட்டாங்குளம், சந்திரகிரி, வென்றிலிங்காபுரம், சக்கரைக்குளம் ஆகிய ஊர்களுக்கு மையமாகத் திகழ்கின்றது. மொத்தம் 20000 பேர் வசிக்கின்றார்கள். இந்தப் பகுதியில் தேசியமயம் ஆக்கப்பட்ட வங்கி எதுவும் கிடையாது. எனவே, 15 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சங்கரன்கோவிலுக்குத்தான் செல்ல வேண்டும். இந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் சுமார் 700 பேர் இந்தியப் படையில் பணிபுரிகின்றார்கள். வளைகுடா நாடுகளில் 750 பேர் வேலை செய்கின்றார்கள். ஆண்டு வரவு செலவு 25 கோடிக்கு மேல் நடைபெறுகின்றது. எனவே, நடுவக்குறிச்சியில் கனரா வங்கி அல்லது ஐஓபி வங்கியின் தேசிய அமைத்துத் தருமாறு கேட்டுக் கொள்கின்றேன். 

3. கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பெத்தேல்புரம், ஒரு பரபரப்பான வணிக மையம் ஆகும். சுற்றிலும் உள்ள, சேனன்விளை, செம்பொன்விளை, மேற்கு நெய்யூர், வழுதை அம்பலம், கோணங்காடு, படுவர்கரை, களிமார், நெய்யூர் மேக்கன்கரை, வர்தன்விளை உள்ளிட்ட 15 கிராமங்களுக்கு மையமாக பெத்தேல்புரம் விளங்குகின்றது. ஒட்டுமொத்தமாக 20000 மக்கள் வசிக்கின்றார்கள். பெத்தேல்புரத்தில், அரசு மருத்துவமனை, மேனிலைப்பள்ளி, அஞ்சல் அலுவல் அகம், கிராம நிர்வாக அலுவல் அகம், முந்திரி ஆலைகள், காய்கறிச் சந்தை, கூட்டுறவு பால் சொசைட்டி, சிபிஎ°இ என எத்தனையோ நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. ஆனால், இந்தப் பகுதியில் வங்கிக் கிளைகள் எதுவும் இல்லை. 

Vaiko met Nirmala Sitharaman in her office room .. The Finance Minister accept hes demand.

கடந்த 29.07.2021 அன்று, பெத்தேல்புரத்தில் வங்கிக் கிளை அமைத்துத் தரக் கோரி ஏற்கனவே மின்அஞ்சல் வழியாகக் கோரிக்கை விடுத்துள்ளேன். எனவே, கனரா வங்கி, இந்தியன் அல்லது இந்தியன் ஓவர்சீஸ் வங்கி என ஏதேனும் ஒரு வங்கிக் கிளை அமைத்துத் தருமாறு கேட்டுக் கொள்கின்றேன். இவ்வாறு வைகோ கேட்டுக்கொண்டார். வங்கிக் கிளைகள் அமைத்துத் தருவதாக நிதி அமைச்சர் நிர்மலா உறுதி அளித்தார்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios