நீட் தேர்வு, மத்திய அரசின் வஞ்சகமான வேலை என்றும், மாநில அரசின் பாடத்திட்டத்தை உயர்த்த வேண்டும் என்றும் மதிமுக பொது செயலாளர் வைகோ கூறியுள்ளார்-

நீட் தேர்வுக்கு விலக்களிக்ககோரி, மதிமுக சார்பில் போராட்டம் நடத்துவதற்கு காவல் துறை அனுமதி மறுத்தது.

இந்த நிலையில், மதிமுக பொது செயலாளர் வைகோ, நேற்று பேசும்போது, நீட் தேர்வினால் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றார்.

மதிமுகவின் போராட்டத்துக்கு காவல்துறை முதலில் அனுமதி தருவதாக கூறினர். இப்போது அனுமதி மறுத்துள்ளனர்.

திட்டமிட்டப்படி போராட்டம நடைபெறும் என்றும், போராட்டத்தை வேறு தேதிக்கு மாற்றப்படவில்லை என்றும் கூறினார்.

இந்த நிலையில், சென்னை, பாரிமுனையில் உள்ள ஆட்சியர் அலுவலகம் முன்பு வைகோ உள்ளிட்ட மதிமுக தொண்டர்கள் மற்றும் மாணவர்கள் என ஏராளமானோர் நீட் தேர்வுக்கு விலக்களிக்கக்கோரி ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தின்போது, மதிமுக பொது செயலாளர் வைகோ செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, மத்திய அரசின் வஞ்சகமான வேலை என்று கூறியுள்ளார்.

மாநில அரசின் பாடத்திட்டத்தை உயர்த்துங்கள் என்றும் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் இருந்த கேள்விகள் கேட்கக் கூடாது என்றார்.

மாநிலத்தின் பாடத்திட்டத்தன்படிதான் தேர்வு நடத்த வேண்டும் என்றும் வைகோ அப்போது கூறியுள்ளார்.