Asianet News TamilAsianet News Tamil

தாராளமாக நிதி கொடுங்கள்... முதலமைச்சர் ஸ்டாலினின் வேண்டுகோளுக்கு முதல் ஆளாக செவி சாய்த்த வைகோ...!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் கோரிக்கையை ஏற்று முதல் ஆளாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நிதி அளித்துள்ளார்.

Vaiko given rs.10 lakh to CM Relief fund for corona pandemic
Author
Chennai, First Published May 12, 2021, 5:07 PM IST

இந்தியாவில் விஸ்வரூபம் எடுத்து வரும் கொரோனாவைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக முயன்று வருகின்றன. தமிழகத்தில் அதிகரித்து வரும் தொற்றைக் கட்டுப்படுத்தும் வரும் வரும் 24ம் தேதி வரை முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

Vaiko given rs.10 lakh to CM Relief fund for corona pandemic

இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா பெருந்தோற்றால் ஏற்பட்டுள்ள சவால்களை சமாளிக்கவும், மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கவும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தாராளமாக நன்கொடை வழங்கிட வேண்டுமென்று மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்திருந்தார். 

Vaiko given rs.10 lakh to CM Relief fund for corona pandemic

அப்படி அளிக்கப்படும் ஒவ்வொரு நன்கொடைகளும் ஆக்சிஜன் உற்பத்தி மற்றும் சேமிப்பு நிலையங்கள் அமைத்தல், ஆக்சிஜன் வசதிகளுடன்கூடிய படுக்கைகளை அமைத்தல், ஆக்சிஜன் செரிவூட்டும் இயந்திரங்கள், ஆர்.டி.பி.சி.ஆர். கிட்டுகள், உயிர்காக்கும் மருந்துகள், தடுப்பூசிகள் மற்றும் பிற மருத்துவக் கருவிகளை வாங்குதல் போன்ற கொரோனா நிவாரண நடவடிக்கைகளுக்கு மட்டுமே முழுமையாகப் பயன்படுத்தப்படும் என்றும் உறுதியளித்தார். 

Vaiko given rs.10 lakh to CM Relief fund for corona pandemic

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் கோரிக்கையை ஏற்று முதல் ஆளாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நிதி அளித்துள்ளார். மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ரூ 10,00,000 ( ரூபாய் பத்து இலட்சம்) நிதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கான காசோலையை அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பா இன்று கூடுதல் தலைமைச் செயலாளர் கிருஷ்ணனிடம் வழங்கியதாகவும் மதிமுக சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

Follow Us:
Download App:
  • android
  • ios