திமுக சார்பில் ராஜ்ய சபா எம்.பி பதவிக்காக வைகோ திமுக வை சேர்ந்த வில்சன், சண்முகம் ஆகியோர் மனு தாக்கல் செய்தனர்.

தலைமை செயலகம் வந்த அவர்கள் சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசனிடம் மனு தாக்கல் செய்தனர். அவர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. தேச துரோக வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டதால் வைகோவுக்கு சிறப்பு நீதிமன்றம் ஓராண்டு சிறை தண்டனையும், ரூ 10 ஆயிரம் அபராதமாகவும் விதித்தது. இந்நிலையில் ஒரு மாத காலம் அவருக்கு வழங்கிய தண்டனையை நிறுத்தி வைத்தது சிறப்பு நீதிமன்றம். அத்துடன் வைகோவுக்கு ஜாமின் வழங்கியது.

தண்டனை அறிவிக்கப்பட்டதால் வைகோ மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்படுவாரா? என்கிற குழப்பம் நிலவியது. இந்நிலையில் அவர் வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளார். இதனால் அவர் மாநிலங்களை எம்.பியாக தேர்வு செய்யப்பட்டு நாடாளுமன்றத்திற்கு செல்வது உறுதியாகி இருக்கிறது.

இந்த வேட்பு மனு தாக்கலின் போது கனிமொழி, துரைமுருகன், மு.க.ஸ்டாலின் ஆகியோர் உடன் இருந்தனர்.  மனு தாக்கல் செய்த போது உடனிருந்த ஸ்டாலின் மிகுந்த உற்சாகத்துடன் காணப்பட்டார். பேரவை செயலாளர் சீனிவாசன் இருக்கைக்கு எதிராக வைகோவுடன் உட்கார்ந்திருந்த மு.க.ஸ்டாலின் மேஜையில் விரல்களை வைத்து தாளம் போட்டு சிரித்தப்படி உற்சாகத்தில் பேசிக் கொண்டிருந்தார்.