கண்மாய் பராமரிப்புப் பணியில் ஊழல் நடப்பதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். 

சில நாட்களுக்கு முன்பு நடிகர் கமலஹாசன் தமிழக அரசின் அனைத்து துறைகளிலும் ஊழல் நிறைந்திருப்பதாக கருத்தை முன்வைத்தார். 

இதற்கு தமிழக அமைச்சர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். இதனால் கமலுக்கும் தமிழக அமைச்சர்களுக்கும் முட்டிக்கொண்டது.

இதையடுத்து ஆதாரம் இருந்தால் மட்டுமே பேச வேண்டும் எனவும், ஆதாரத்தை காண்பியுங்கள் எனவும் அமைச்சர்கள் ஆர்டர் போட்டனர். 

ஊருக்கே தெரிந்த விஷயங்களை பற்றி அமைச்சர்கள் ஆதாரம் கேட்கின்றனர் என கமல் விமர்சித்தார். 

இந்நிலையில், கண்மாய் பராமரிப்புப் பணியில் ஊழல் நடப்பதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 3,000 கண்மாய்களை ரூ.640 கோடியில் சீரமைக்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்றும், ஒப்பந்ததாரர்கள் 11.5% கமிஷன் தருமாறு பொதுப்பணித்துறை அதிகாரிகள் வலியுறுத்துவதாகவும் குற்றம் சாட்டினார். 

ரூ.75 கோடி கமிஷன் வசூலிக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாகவும், கோடிக்கணக்கில் கொள்ளை அடிக்க முயற்சிக்கும் அரசையும்,  பொதுப்பணித்துறையையும் கண்டிப்பதாகவும் மதிமுக பொதுச்செயலாலர் வைகோ தெரிவித்துள்ளார்.