Asianet News TamilAsianet News Tamil

சின்னத்தால் நழுவும் வைகோ- திருமா... சிதைகிறதா திமுக கூட்டணி..?

இந்த முறை ரஜினி தேர்தலுக்கு வந்தால் அது திமுகவுக்கு பெரிய பின்னடைவை தரும் என ஐபேக்கின் சர்வே முடிவு தெரிவித்துள்ளது. 

Vaiko and Thiruma slipping through the symbol ... Is the DMK alliance disintegrating ..?
Author
Tamil Nadu, First Published Oct 14, 2020, 12:33 PM IST

பிராசாந்த் கிஷோரின் ஆலோசனை படி, வரும் சட்ட மன்ற தேர்தலில், 200 தொகுதிகளுக்கும் மேல் திமுக தனித்து போட்டியிடப் போகிறது. ஏற்கனவே காங்கிரஸ் எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் 60 தொகுதிகள் ஒதுக்குவதுடன், துணை முதலமைச்சர் பதவி கண்டிப்பாக வேண்டும் என காங்கிரஸ் கேட்டு வருகிறது. இந்த பிரச்சனை ஓய்வதற்குள் தற்போது திமுகவிற்கு  அடுத்த பிரச்சனை ஆரம்பித்துள்ளது. 

தேர்தலில் போட்டியிடும் கூட்டணிக் கட்சிகளும் ‘உதயசூரியன்’ சின்னத்தில்தான் போட்டியிட வேண்டும் என திமுக தீர்க்கமாக முடிவெடுத்துள்ளது. 
மற்ற கட்சிகளையும் தங்களது கட்சி சின்னத்தில் தான் போட்டியிட வேண்டும் என திமுக வலியுறுத்து வருகிறது. இந்த முடிவினால் கூட்டணி கட்சிகள் திமுகவின் மீது கடும் கோபத்தில் உள்ளது.

Vaiko and Thiruma slipping through the symbol ... Is the DMK alliance disintegrating ..?

ஆனால் மதிமுக தனி சின்னத்தில் போட்டியிடும் என்றும், “நாங்கள் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட மாட்டோம் இதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்” என்றும் வைகோ கூறியுள்ளார். அதேபோல சட்டப்பேரவை தேர்தலில் விசிக தனிச்சின்னத்தில் தான் போட்டியிடும் என்று விசிக தலைவர் திருமாவளவன் திட்டவட்டமாக கூறியுள்ளார். விடுதலை சிறுத்தைகளும், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகமும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட மறுப்பு தெரிவித்தது திமுகவிற்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. 

இதற்கிடையில் கூட்டணி மற்றும் சின்னம் குறித்து கேள்வி எழுப்புகையில் அதிலிருந்து நழுவுவது போல், திமுகவின் செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன்,” எந்த கட்சி எந்த சின்னத்தில் போட்டி என்பதை தேர்தல் நேரத்தில் பேசி முடிவெடுப்போம்” என தெரிவித்துள்ளார். இந்த முறை ரஜினி தேர்தலுக்கு வந்தால் அது திமுகவுக்கு பெரிய பின்னடைவை தரும் என ஐபேக்கின் சர்வே முடிவு தெரிவித்துள்ளது. இந்நிலையில் இப்படி கூட்டணி கட்சிகளின் சின்னம் குறித்த பிரச்சனை வலுத்து வருவதால், திமுக தலைவர் ஸ்டாலின் கலக்கத்தில் உள்ளார்.

 Vaiko and Thiruma slipping through the symbol ... Is the DMK alliance disintegrating ..?

இதனால் திமுகவிற்கும் கூட்டணி கட்சிகளுக்கும் நடுவே விரைவில் பெரும் பூகம்பம் வெடிக்க உள்ளது. கூட்டணி உடைந்துவிடுமோ என்ற பயத்தால் இந்த பிளவை சரிசெய்வதற்காகவும் கட்சிகளிடையே சமாதானத்தை ஏற்படுத்தவும் தற்போது திமுக தலைவர் ஸ்டாலின் கூட்டணியின் பாதையும் பயணமும், தெளிவு வாய்ந்தவை என  அறிக்கை வெளியிட்டிருந்தார். ஆனால் திமுகவின் இந்த யுத்தி இன்னும் சிறிது காலத்திலேயே உடைக்கப்படும் என்கின்றனர் மூத்த அரசியல் பார்வையாளர்கள்.

Follow Us:
Download App:
  • android
  • ios