Asianet News TamilAsianet News Tamil

வருமான வரித்துறையிடம் வத்தி வச்சாரா வைத்திலிங்கம் !! கோபத்தின் உச்சத்தில் மன்னார்குடி குடும்பம்!!!

vaidilingam gave information to it dept abput sasikala family
vaidilingam gave information to it dept abput sasikala family
Author
First Published Nov 16, 2017, 11:33 AM IST



சசிகலா குடும்பத்தினரை வளைத்து, வளைத்து வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய ரெய்டுக்கு பின்னணில் இருந்தது,. அந்தக்குடும்பத்தினரால் வளர்த்தெடுக்கப்பட்ட வைத்திலிங்கம் எம்.பி.தான் என வெளியாகியுள்ள தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

187 இடங்கள்… 1800 அதிகாரிகள்.. என தமிழகம் உட்பட நாடு முழுவதும் பல இடங்களில் சசிகலாவின் குடும்பத்தை குறிவைத்து பரபரவென ரெய்டு நடத்திய வருமான வரித்துறையினர் பணம்இ நகைகள், வைரங்கள்இ 1500 கோடி ரூபாய் பெறுமானமுள்ள சொத்து ஆவணங்கள் என பெரும் புதையலை எடுத்தாக கூறப்படுகிறது.

vaidilingam gave information to it dept abput sasikala family

இந்த வருமான வரி சோதனையை நடத்த அழுத்தம் கொடுத்து இந்த ரெய்டு நடக்க காரணமாக இருந்தவர் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிதான் என டி.டி.வி.தினகரன் உள்ளிட்ட சசிகலா குடும்பத்தினர் நினைத்திருந்தனர்.

எந்தெந்த சொத்துக்கள் எங்கே  இருக்கிறது, யாரெல்லாம் தொடர்பில் இருக்கிறார்கள் என்ற 187 பேர் லிஸ்ட்டையும் அவர்தான் கொடுத்தார் என கூறி வந்தனர்..

ஆனால் விவேக் தரப்பினர் இதனை நம்ப மறுக்கின்றனர். எடப்பாடி பழனிசாமி ரெய்டு நடத்த அழுத்தம் கொடுத்திருக்கிலாம், ஆனால் எங்கெல்லாம் சொத்துக்கள் இருக்கு, யாரு வீட்டுல எல்லாம் ரெய்டு நடத்தலாம் என்பதை அவர் சொல்லியிருக்க மாட்டார் என கூறுகின்றனர்.

vaidilingam gave information to it dept abput sasikala family

ஆனால் வைத்திலிங்கம் தான் இதை செய்திருக்க முடியும் என்ற முழுமையாக நம்புகிறார் விவேக். அவருக்கு தான் இந்த 187 பேர் குறித்த அனைத்து விபரகளும் தெரியும் என நினைக்கின்றனர்.

விவேக் டெல்லியில் உள்ள சிலரை தொடர்பு கொண்டு கேட்டதில் தான் அவருக்கு வைத்திலிங்கம் வைத்தஅதிர்ச்சி வைத்தியம் தெரிய வந்துள்ளது. சசிகலா குடும்பத்தை பற்றியும், அந்த குடும்பம் சார்ந்தவர்கள், நண்பர்கள் என எல்லா தகவல்களும் வைத்திலிங்கம் மூலமாகத்தான் வருமான வரித் துறைக்கு சொல்லப்பட்டது தெரிய வந்தது.

டெல்லியில் அவர் தங்கியிருந்தபோது நேரடியாகவே ஒரு பட்டியலைக் கொண்டுபோய் கொடுத்திருக்கிறார். அவர் கொடுத்த பட்டியலை வைத்துதான் வருமான வரித்துறை ரெய்டுக்கு திட்டமிட்டதாக விவேக் தரப்பு நிச்சயமாக நம்புகிறது.

இது தொடர்பாக விவேக்கின் நண்பர் ஒருவர் தளியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளிக்கும்போது, வைத்திலிங்கம்தான் இந்த வேலையை செய்துள்ளார் என உறுதியாக தெரிவித்தார்.

 

 

 

 

Follow Us:
Download App:
  • android
  • ios