Asianet News TamilAsianet News Tamil

தடுப்பூசி தட்டுப்பாடு.. மோடி அரசின் கையாலாகாத தனத்தை காட்டுகிறது.. ப.சிதம்பரம் கடும் விமர்சனம்..!

தேர்தல் அறிக்கையை படிப்படியாக தமிழக அரசு நிறைவேற்றி வருகிறது. தடுப்பூசி தட்டுப்பாடு விவகாரம் மோடி அரசின் கையாலாகாத தன்மையை காட்டுகிறது. 10 நாட்களாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சரை காணவில்லை. தமிழகத்தில் 36 மாவட்டங்களில் தடுப்பூசி இல்லை.

Vaccine shortage shows the incompetence of the Modi government...P.Chidambaram
Author
Sivaganga, First Published Jun 12, 2021, 12:19 PM IST

மத்திய அரசு 3 தடுப்பூசிகளுக்குத்தான் இதுவரைகொள்கைரீதியாக அனுமதி தந்துள்ளது. பைசர், மார்டனா வருகிறது என்பதெல்லாம் முழுக்க, முழுக்க பொய் என்று ப.சிதம்பரம் கூறியுள்ளார்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;- பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு மத்திய அரசு இதுவரை நியாயமான காரணத்தை கூறவில்லை. இந்த விலை உயர்வு அனைத்து தரப்பினரையும் பாதிக்கிறது. கச்சா எண்ணெய் தயாரிப்பு, டீலர் கமிஷன் செலவு என பார்த்தால் லிட்டர் ரூ.39 முதல் ரூ.40 தான் வருகிறது. ஆனால் பல இடங்களில் லிட்டர் ரூ.100க்கு சென்றுவிட்டது. ஏழை, நடுத்தர மக்களின் வயிற்றில் அடித்து பெரும் லாபத்தை மத்திய அரசு சம்பாதிக்கிறது.

Vaccine shortage shows the incompetence of the Modi government...P.Chidambaram

 நீட் தேர்வில் தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும். நீட் தேர்வை மாநிலங்கள் விருப்பப்படி நடத்திகொள்ளலாம். மத்திய அரசு தேவையில்லாமல் மாநில அரசுகளின் உரிமைகளில் தலையிடக் கூடாது. கொரோனாவை கட்டுப்படுத்த மக்களுக்கு சுயக் கட்டுப்பாடும் அவசியம். 

Vaccine shortage shows the incompetence of the Modi government...P.Chidambaram

தேர்தல் அறிக்கையை படிப்படியாக தமிழக அரசு நிறைவேற்றி வருகிறது. தடுப்பூசி தட்டுப்பாடு விவகாரம் மோடி அரசின் கையாலாகாத தன்மையை காட்டுகிறது. 10 நாட்களாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சரை காணவில்லை. தமிழகத்தில் 36 மாவட்டங்களில் தடுப்பூசி இல்லை. இதிலும் தமிழக மக்களை மோடி அரசு வஞ்சிக்கிறது. மேலும் மத்திய அரசு 3 தடுப்பூசிகளுக்குத்தான் இதுவரைகொள்கைரீதியாக அனுமதி தந்துள்ளது. பைசர், மார்டனா வருகிறது என்பதெல்லாம் முழுக்க, முழுக்க பொய் என்றும் ப.சிதம்பரம் கூறியுள்ளார். 

Follow Us:
Download App:
  • android
  • ios