Asianet News TamilAsianet News Tamil

உத்தராகண்ட் மாநில முதல்வர் யார்? வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

உத்தராகண்ட் மாநில முதல்வராக பாஜகவின் புஷ்கர் சிங் தாமி மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். டேராடூனில் நடைபெற்ற பாஜக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் புஷ்கர் சிங் தாமி தேர்வு செய்யப்பட்டார். 

Uttarakhand cm had been announced after bjp mla meet
Author
Uttarakhand, First Published Mar 21, 2022, 6:12 PM IST

உத்தராகண்ட் மாநில முதல்வராக பாஜகவின் புஷ்கர் சிங் தாமி மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். டேராடூனில் நடைபெற்ற பாஜக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் புஷ்கர் சிங் தாமி தேர்வு செய்யப்பட்டார். உத்தரப் பிரதேசம், உத்தரகண்ட், கோவா, பஞ்சாப், மணிப்பூர் ஆகிய 5 மாநிலங்களுக்கு கடந்த மார்ச் 10 ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில் உத்தரகாண்ட் மாநிலத்தில் 70 சட்டசபை தொகுதிகளில் 47 இடங்களை கைப்பற்றி பாஜக ஆட்சியை தக்க வைத்துக் கொண்டது. காங்கிரஸ் 19 இடங்களை பெற்று 2வது இடத்தை பிடித்துள்ளது. இந்நிலையில், டேராடூனில் உள்ள விதான் சபாவில் உத்தரகாண்ட் மாநிலத்தில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏக்களின் பதவியேற்பு விழா நடைபெற்றது.

Uttarakhand cm had been announced after bjp mla meet

இதில் எம்எல்ஏக்கள் பதவி ஏற்றுக் கொண்டனர். புதிய எம்எல்ஏக்களுக்கு தற்காலிக சபாநாயகர் பன்சிதர் பகத் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். அதை தொடர்ந்து இன்று மாலை பாஜக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் புதிய முதலமைச்சர் தேர்வு செய்யப்படுவார் என்று உத்தரகாண்ட் மாநில பாஜக தலைவர் மதன் கவுசிக் தெரிவித்திருந்தார். இதுக்குறித்து உத்தரகாண்ட் மாநில முன்னாள் முதலமைச்சர் திரிவேந்திரசிங் ராவத் கூறுகையில், முதலமைச்சர் பதவிக்கு பலர் விருப்பம் தெரிவித்துள்ளதாகவும், அவர்களில் ஒருவர் முதலமைச்சராக தேர்வு செய்யப்படுவார் என்றும் தெரிவித்திருந்தார்.

Uttarakhand cm had been announced after bjp mla meet

இந்த நிலையில் உத்தராகண்ட் மாநில முதல்வராக பாஜகவின் புஷ்கர் சிங் தாமி மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். டேராடூனில் நடைபெற்ற பாஜக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் புஷ்கர் சிங் தாமி தேர்வு செய்யப்பட்டார். உத்தராகண்ட் சட்டப்பேரவை தேர்தலில் பாஜக 47 இடங்களை கைப்பற்றி ஆட்சியை தக்க வைத்தது. சட்டப்பேரவை தேர்தலில் தோல்வியுற்ற நிலையிலும் புஷ்கர் சிங் தாமி முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டார். முன்னதாக உத்தரகாண்ட் மாநில முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி, காதிமா சட்டசபை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் புவன் சந்திர கப்ரியிடம் 6,579 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். இதையடுத்து அவர் கடந்த 11 ஆம் தேதி முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Follow Us:
Download App:
  • android
  • ios