குடியுரிமை சட்ட மசோதாவிற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. பல்வேறு இடங்களில் மாணவர் அமைப்பினர் போராட்டத்தை நடத்திவருகின்றனர். டெல்லியில் நடந்த மாணவர் போராட்டத்தில் வன்முறை வெடித்தது. மாணவர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து தொடர் ஆர்ப்பாட்டங்கள் நடந்து வருகிறது.

மசோதாவிற்கு ஆதராகவும் சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று இரவு நடிகர் ரஜினிகாந்த் எந்த பிரச்சனைக்கும் வன்முறை தீர்வாகாது என்று ட்வீட் செய்திருந்தார். நாட்டில் நடைபெறும் வன்முறை சம்பவங்கள் வேதனை அளிப்பதாகவும் தெரிவித்திருந்தார். ரஜினிகாந்தின் இந்த கருத்துக்கு ஆதரவும் எதிர்ப்பும் வலுத்து வருகிறது. திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினும் ரஜினியை மறைமுகமாக தாக்கியிருக்குகிறார்.

 

வன்முறையை கண்டு அஞ்சும் வயதான, வசதியான பெரியவர்களை வீட்டிலேயே விட்டு போராட்டத்திற்கு அனைவரும் வர வேண்டும் என கூறியிருக்கிறார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் ட்விட்டர் பதிவில், ' 23ம்தேதி சென்னையில் நடைபெறும் #CAA2019 எதிர்ப்பு பேரணியில் அனைவரும் பங்கெடுப்போம். உரிமைக்கான போராட்டத்தைக் கண்டு 'வன்முறை' என்று அஞ்சும் வசதியான, வயதான பெரியவர்களைச் சரியான பாதுகாப்புடன் வீட்டிலேயே விட்டுவரவும்' என பதிவிட்டிருக்கிறார்.

இதனால் ரஜினி ரசிகர்களுக்கும் திமுகவினருக்கும் சமூக வலைத்தளங்களில் காரசாரமான விவாதங்கள் நடந்து வருகின்றன.