தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் துபாய் நாட்டிற்கு 4 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு தொழிலதிபர்களை சந்தித்து தமிழகத்திற்கு பல்லாயிரம் கோடி ரூபாய் அளவிலான முதலீடுகளை பெற்று வந்தார்.  இந்த நிலையில் தமிழக முதலமைச்சரை தங்கள் நாட்டிற்கு வருகை தறுமாறு அமெரிக்கா, தென் கொரிய நாட்டு தொழிலதிபர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

வெற்றிகரமாக முடிந்த துபாய் பயணம்

தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் துபாய் நாட்டிற்கு 4 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு தொழிலதிபர்களை சந்தித்து தமிழகத்திற்கு பல்லாயிரம் கோடி ரூபாய் அளவிலான முதலீடுகளை பெற்று வந்தார். இந்த நிலையில் தமிழக முதலமைச்சரை தங்கள் நாட்டிற்கு வருகை தறுமாறு அமெரிக்கா, தென் கொரிய நாட்டு தொழிலதிபர்கள் அழைப்பு விடுத்துள்ளனர். துபாய் நாட்டில் மிகப்பெரிய அளவிலான வர்த்தக கண்காட்சி நடைபெற்றது. இதில் தமிழக அரங்கை முதலமைச்சர் மு க ஸ்டாலின் கடந்த 25ஆம் தேதி துவக்கி வைத்தார். இதனை தொடர்ந்து அங்கு தங்கி பல்வேறு துபாய் அமைச்சர்கள் மற்றும் தொழிலதிபர்களிடம் ஆலோசனை மேற்கொண்ட முதலமைச்சர் தமிழ்நாட்டில் தொழில் தொடங்க வருமாறு அழைப்பு விடுத்திருந்தார். மேலும் தமிழகத்தில் ரூ.3500 கோடியில் ஷாப்பிங் மால் தொடங்குவதற்கான ஒப்பந்தத்திலும் மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து பல்வேறு தொழில் முதலீட்டாளர்களிடம் மேற்கொண்ட ஒப்பந்தங்கள் என சுமார் 6,100 கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. இதன் மூலமாக 8 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது. முதலமைச்சரின் துபாய் பயணம் வெற்றிகரமாக அமைந்ததாக அரசியல் விமர்சகர்கள் தெரிவித்து வந்தனர்.

அமெரிக்கா, தென்கொரியா அழைப்பு

இந்தநிலையில் தமிழக முதலமைச்சர் அடுத்த கட்டமாக எந்த நாட்டிற்கு செல்வார் என்று தொழிலதிபர்கள் மட்டுமில்லாமல் அரசியல் மட்டத்திலும் பேச்சு எழுந்தது. இந்த நிலையில் தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் முதலமைச்சரின் துபாய் பயணம் வெற்றிகரமாக அமைந்திருப்பதாகவும் முதலமைச்சர் வெளிநாட்டு பயணத்தின் காரணமாக பல கோடி ரூபாய் அளவிற்கு முதலீடுகள் தமிழகத்திற்கு வந்துள்ளதாகவும் தெரிவித்தார். அடுத்த கட்டமாக முதலமைச்சர் மு க ஸ்டாலின் தங்கள் நாட்டிற்கு வரும்படி அமெரிக்கா, தென்கொரியா ஆகிய நாடுகளைத் அழைப்பு விடுத்துள்ளதாகவும் தெரிவித்தார். எனவே முதலமைச்சரின் அடுத்தக்கட்ட பயணம் விரைவில் முடிவெடுக்கப்படும் என்றும் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.


லண்டன் செல்ல திட்டம் ?

இந்தநிலையில் தமிழக மக்களின் முக்கிய நீர் ஆதரமாக உள்ள முல்லை பெரியார் அணையை பென்னிகுவிக் கட்டினார். அவரை கெளரவப்படுத்தும் வகையில் லண்டனில் பென்னிக்குவிக் சிலையானது அமைக்கப்பட்டு வருகிறது. அந்த சிலை திறப்பு விழாவிற்கு முதலமைச்சர் மு க ஸ்டாலின் கலந்து கொள்ள லண்டன் செல்ல இருப்பதாக கூறப்படுகிறது. அப்போது அங்குள்ள தொழில் அதிபர்களை சந்திந்து தமிழகத்தில் தொழில் முதலீடு தொடர்பாக பேச்சு வார்த்தை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதே போல அமெரிக்கவில் தமிழ்ச் சங்கமும் முதலமைச்சர் மு க ஸ்டாலினை அமெரிக்கா நாட்டிற்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. எனவே முதலமைச்சர் பயணம் தொடர்பான முடிவு சட்டப்பேரவை கூட்டத்திற்கு பிறகு முடிவு எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.