Asianet News TamilAsianet News Tamil

#BREAKING விரைவில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்... விருப்ப மனு தேதியை அறிவித்த திமுக..!

ஊரக உள்ளாட்சி பதவிகள் 2019ம் ஆண்டு டிசம்பர் மற்றும் சமீபத்தில் நடந்த தேர்தல்கள் வாயிலாக நிரப்பப்பட்டு விட்டன. மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் அடங்கிய நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்த வேண்டி உள்ளது. உச்சநீதிமன்றத்தின் உத்தரவுப்படி, இதற்கான பணிகளில் மாநில தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

Urban Local Election ... DMK announces option petition date
Author
Tamil Nadu, First Published Nov 19, 2021, 12:52 PM IST

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விரும்பும் திமுகவினர் வரும் 21-ம் தேதி முதல் விருப்ப மனு அளிக்கலாம் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். 

ஊரக உள்ளாட்சி பதவிகள் 2019ம் ஆண்டு டிசம்பர் மற்றும் சமீபத்தில் நடந்த தேர்தல்கள் வாயிலாக நிரப்பப்பட்டு விட்டன. மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் அடங்கிய நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்த வேண்டி உள்ளது. உச்சநீதிமன்றத்தின் உத்தரவுப்படி, இதற்கான பணிகளில் மாநில தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. புதிதாக உருவாக்கப்பட்டுள்ள மாவட்டங்களில், வார்டு மறுவரையறை செய்யும் பணியும் நடைபெற்று வருகிறது. 

Urban Local Election ... DMK announces option petition date

இந்த தேர்தலை மூன்று கட்டங்களாக நடத்தி 2022 ஜனவரியில் புதிய நிர்வாகிகளை பொறுப்பேற்க வைக்க ஆணையம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது ஒருபுறம் இருக்க, எந்தெந்த மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளுக்கு, எந்த கட்டத்தில் தேர்தல் நடத்தலாம் என்பது குறித்த அட்டவணை தயாரிப்பு பணிகள் மும்பரமாக நடந்து வருகின்றன. 

Urban Local Election ... DMK announces option petition date

இந்நிலையில், திமுக தலைமை முக்கிய அறிவிப்பை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், நகர்ப்புற தேர்தலுக்காக நவம்பர் 21ம் தேதி முதல் திமுகவில் விருப்பமான விநியோகிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி திமுகவில் நகராட்சி உறுப்பினர் பதவிக்கு ரூபாய்.10,000 மற்றும் பேரூராட்சி உறுப்பினர் பதவிக்கு ரூபாய் 2500 விருப்பமனு கட்டணம் செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விருப்ப மனு வினியோகம் அறிவிக்கப்பட்டுள்ளதால் விரைவில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

Follow Us:
Download App:
  • android
  • ios