மற்ற மாநிலங்களைக் போல மருந்து மற்றும் செயற்கை சுவாசம் உள்ளிட்ட கொரோனா சிகிச்சை உபகரணங்களுக்கு புதுச்சேரியில் பற்றாகுறை இல்லை எனவும்  அடுத்த 10 நாட்களுக்கு சிகிச்சைக்கு எது வேண்டுமோ அது புதுச்சேரியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது எனவும் அம்மாநில துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்திர ராஜன் தெரிவித்துள்ளார். 

பாவேந்தர் பாரதிதாசனின் 57 வது நினைவு நாள் நிகழ்ச்சி புதுச்சேரி செய்தி மற்றும் விளம்பர துறை சார்பில் அனுசரிக்கப்பட்டது, இதில் ஆளுனர் மாளிகை அருகே உள்ள அவரது சிலைக்கு துணை நிலை ஆளுநர் தமிழிசை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை, மற்ற மாநிலங்களில் மருந்து மற்றும் செயற்கை சுவாசம் உள்ளிட்ட கொரோனா சிகிச்சை உபகரணங்களுக்கு பற்றாக் குறை இருப்பது போல புதுச்சேரியில் பற்றாகுறை இல்லை என்றார். அடுத்த 10 நாட்களுக்கு சிகிச்சைக்கு எது வேண்டுமோ அது புதுச்சேரியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

முக கவசம் அனியாதவர்களுக்கு  அபராதம் விதித்து அவர்களுக்கு முக கவசம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கொரோனா கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது சுற்றுலாப்பயணிகளை கட்டுப்படுத்தி பொதுமக்களை பாதுகாப்பதற்காக இந்த வார இறுதியில் பரிசார்த்த முறையில் ஊரடங்கு அமல் படுத்தப்பட்டுள்ளது, பாதிப்பை பொருத்து அடுத்த வாரத்திற்கான ஊரடங்கு அறிவிக்கபடும். வரும் திங்கட்கிழமை முதல் அதியாவசிய கடைகள் தவிர மற்ற கடைகளை மதியம் 2:30 மணிக்கே அடைக்கப்படும். வலியோடு சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும் மக்களின் உயிரை பாதுக்கும் வகையில் புதுச்சேரியில் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளது இவ்வாறு அவர் பேசினார்.