1980ல் திமுகவின் இளைஞரணி முதன்முதலாக மதுரையில் வைத்து தொடங்கப்பட்டது. அதன் பின்னர்  அந்த இளைஞரணிக்காக 7 பேர் கொண்ட ஒரு அமைப்பு குழு உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பு குழுவில் ஸ்டாலினும் ஒரு அமைப்பாளராக நியமிக்கபட்டார் அதன் பின்னர் இந்த இளைஞரணி மூலம் திமுகவிற்காக அவர் எடுத்து செயலாற்றிய மாபெரும் முயற்சிகளின் பயனாக ஸ்டாலின் திமுகவின் மாநில இளைஞரணி செயலாளராக ஆனார்.

ஆனால் இதற்கெல்லாம் முன்னதாக அவர் கட்சியில் தன்னை ஒரு அடிப்படை தொண்டனாக இணைத்து கொண்டு, கட்சிக்காக களப்பணிகளை மேற்கொண்டிருக்கிறார். 1970களில் திமுகவின் வட்ட பிரதினிதியாக முன்னேறிய ஸ்டாலின் கழகத்தின் பேயரால் இளைஞர்களை ஒன்றிணைத்து கொண்டு கட்சி கூட்டங்களை திறம்பட நடத்துவது. கழகத்திற்கான பிரச்சாரத்தில் ஈடுபடுவது போன்ற பணிகளை திறம்பட செய்திருக்கிறார்.தலைவனின் மகன் என்பதற்காக அரசியல் அவருக்கு அவ்வளவு எளிமையானதாக அமைந்துவிடவில்லை. 

1975ல் வந்த மிசா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட திமுகவினரில் ஸ்டாலினும் ஒருவர். மிசா சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறை சென்ற ஸ்டாலின் அங்கு அடி உதை என சித்ரவதைகளை அனுபவித்திருக்கிறார்.  தன்னுடைய அரசியல் திறமைகளை இவ்விதம் பலமுறை கட்சிக்கு உணர்த்தி இருக்கிறர் ஸ்டாலின். அதிலும் இளைஞரணியின் அலுவலகம் செயல்படுவதற்காக ஸ்டாலின் எடுத்து கொண்ட முயற்சி ஒரு சுவாரஸ்யமான சம்பவமும் கூட. 

திமுக இளைஞரணிக்காக அறிவகத்தை ஒதுக்கி தரும்படி இளைஞரணி சார்பில் அப்போது கோரிக்கை வைத்திருக்கிறார் ஸ்டாலின். அதே சமயம் அறிவகத்திற்காக திமுகவின் தொழிலாளர் அணியும் கோரிக்கை வைத்திருக்கின்றனர்.
இந்த விஷயத்தில் முடிவெடுத்திடும் முன்னர் ஸ்டாலினின் இளைஞரணிக்கும், திமுக தொழிலாளர் அணிக்கும் இடையே ஒரு போட்டி வைத்திருக்கிறார் அன்பழகன். 

அதன் படி இந்த இரு அணிகளில் யார் கட்சிக்கு 10 லட்சம் ரூபாய் நிதி தருகின்றனரோ அவருக்கு தான் அறிவகம் என கூறி இருக்கிறார். இந்த சவாலை ஏற்ற ஸ்டாலின் கட்சி தொடர்பான ஒவ்வொரு நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு இரவு பகல் என பாராது முயற்சி செய்து 11 லட்சம் ரூபாய் நிதி திரட்டி கொடுத்திருக்கிறார். 

அசந்து போன அன்பழகன் இளைஞரணிக்கு அந்த இடத்தை கொடுத்திருக்கிறார். 1980க்கு பிறகு இளைஞரணிக்கு செயலராக நியமிக்க பட்ட ஸ்டாலின் தொடர்ந்து திமுக இளைஞரணியை திறம்பட நடத்தி வந்திருக்கிறார். தந்தையே மகனை பார்த்து பெருமை கொள்ளும் படியான தருணம் ஒன்று அப்போது சமயத்தில் நிகழ்ந்திருக்கிறது.