மத்திய அமைச்சரவையில் அதிமுகவுக்கு இடம் கொடுக்க பாஜக முடிவு செய்துள்ளது. வருகிற டிசம்பர் 14ஆம் தேதி மத்திய அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட உள்ளது.  

அதில் அதிமுகவிற்கு மூன்று அமைச்சர் பதவிகளை தருவதற்கு பாஜக முடிவு செய்துள்ளதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கிறது. அதில் யார் அமைச்சராக இடம் பெறப்போகிறார்கள் என்பது அதிமுகவில் ஒரு பெரிய போட்டியை உருவாக்கியுள்ளது. அமித்ஷாவின் விசிட்டுக்கு பிறகு மத்திய அரசில் ஏற்பட்ட மிக முக்கியமான முடிவாக இது பார்க்கப்படுகிறது. பாஜக அதிமுக கூட்டணி முடிவு செய்யப்பட்டுள்ள நிலையில் மத்திய அமைச்சரவையில் அதிமுக இடம் இடம்பெறவுள்ளது.

 பாஜக கூட்டணியில் இருந்த சிவசேனா, அகாலி தளம் உள்ளிட்ட கட்சிகள் கூட்டணியில் இருந்து வெளியேறிவிட்டன. நிதீஷ் குமாரும் மத்திய அமைச்சரவையில் இடம்பெறவில்லை. இந்த நிலையில் மத்திய அமைச்சரவையில் கூட்டணிக் கட்சிக்கு இடம் கொடுக்கும் வகையில் அதிமுகவை இணைத்துக்கொள்ள பாஜக முன்வந்துள்ளது. சென்றமுறையே மத்திய அமைச்சர் பதவி கிடைக்கும் என எதிர்பார்த்திருந்த ரவீந்திரநாத் குமாருக்கு கிடைக்கவில்லை. ஆகையால் அவருக்கு இந்த முறை வாய்ப்பு நிச்சயம் எனக் கூறப்படுகிறது.

​மத்த்திய அமைச்சரவையை விரிவாக்கம் செய்யும் போது, அதில் ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய். எஸ்.ஆர். காங்கிரஸுக்கும், அ.தி.மு.க.வுக்கும் தகுந்த இடம் தருவோம். குறிப்பாக அ.தி.மு.க.வுக்கு மத்திய அமைச்சரவையில் ஒரு கேபினட் பதவியையும் 2 இணையமைச்சர் பதவியையும் ஒதுக்குவோம் என்று அதிமுகவிடம் சொல்லியிருக்கார். இந்தத் தகவலை எடப்பாடியிடமும் அமித்ஷா சொல்லியிருக்கிறார்.

அ.தி.மு.கவுக்கு ஒரு கேபினட் பதவி என்றும் அதைத் தன் மகன் ரவீந்திரநாத்துக்குதான் ஒதுக்க வேண்டும் என்றும் ஓ.பி.எஸ். அழுத்தம் கொடுத்து வருகிறார்.  தம்பிதுரையோ, ரவீந்திரநாத் முதல் முறையாக இப்போதுதான் பார்லிமெண்டுக்குள் காலடி எடுத்து வைத்து இருக்கிறார். நானோ, நாடாளுமன்றத் துணை சபாநாயகராக இருந்தவன். டெல்லி அரசியல் எனக்கு அத்துப்படி. அதனால் கேபினட் பதவியை எனக்கு மொடுக்க வேண்டும் என்கிறாராம்.  இன்னொரு சீனியரான வைத்திலிங்கம் எம்.பி.யும், "எனக்குத்தான் கேபினட் பதவி'ன்னு கொடி பிடிக்கிறாராம். அதேபோல் மத்திய இணையமைச்சர் பதவிக்கும் முட்டல் மோதல் அதிமுக சீனியர்கள் மத்தியில் அதிகமாகியுள்ளது என்கிறார்கள் அக்கட்சியினர்.