தமிழ் மொழியின் வளர்ச்சிக்காக மேற்கொள்ளும் முயற்சிகளுக்கும், பேராசிரியர் சந்திரசேகரனை இயக்குநராக நியமித்திருந்தார். இந்த நியமனம் குறித்து மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தமிழக முதல்வர் எடப்பாடிக்கு அடுத்த இடத்தில் நடிகர் ரஜினிகாந்த்க்கும் அடுத்ததாக கல்வியமைச்சர் செங்கோட்டையனையும் ட்விட்டரில் இணைத்திருந்தார். அந்த பதிவு அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில்,  நடிகர் ரஜினிகாந்த் பாராட்டு கடிதத்திற்கு மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் டுவிட்டரில் தமிழில் பதில் அளித்துள்ளார்.

அதில், நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களது திறமையான தலைமையில், நம் பாரத தேசத்தின் எல்லா மொழிகளின் வளர்ச்சிக்கும் உறுதுணையாக இருக்க உறுதி கொண்டிருக்கிறோம்.தமிழ் மொழியினை மேலும் வலுப்படுத்தும் அக்கறையுடன் பணிபுரிந்து வருகிறது என்பதை உங்களுக்கு உறுதிபடுத்துகிறேன் என பதிவிட்டுள்ளார்.