கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மத்திய ரயில்வே இணை அமைச்சர் சுரேஷ் அங்காடி காலமானார்.இவரது மரணம் மத்திய அமைச்சர்கள் எம்பிக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.


கொரோனா நோய்த் தொற்று கடந்த மார்ச் மாதம் முதல் இந்தியாவை வாட்டி வதைத்தெடுத்து வருகிறது. கொரோனா தொற்றை கட்டுப்படுத்த மார்ச் மாத இறுதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு. இதையடுத்து நோய்த் தொற்றுவது கட்டுப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைந்த பாடில்லை. மாறாக நாள்தோறும் புதிய கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணமே உள்ளது. தொடக்கத்தில் இந்தியாவில் நோய்த் தொற்று குறைவாகவே இருந்தது. ஆனால் நாட்கள் செல்ல செல்ல கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்தது.
மத்திய ரயில்வே இணை அமைச்சர் சுரேஷ் அங்காடிக்கு செப். 11-ஆம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து டெல்லி எய்ம்ஸில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் சுரேஷ் அங்காடியின் உயிர் பிரிந்தது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழக்கும் நான்காவது நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் அங்காடி.