Union Minister Anand Kumar Hegdes speech is against secularism

மத்திய அமைச்சர் ஆனந்த்குமார் ஹெக்டேயின் பேச்சு மதச்சார்பின்மைக்கு எதிரானது எனவும் இந்திய அரசியலமைப்புக்கு எதிரான மீறல் எனவும் திமுக செயல்தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். 

அவரது பேச்சை நீக்குவதற்கு பதில் அவரை அமைச்சரவையில் இருந்து பிரதமர் மோடி நீக்க வேண்டும் எனவும் ஸ்டாலின் வலியுத்தியுள்ளார்.

மத்திய வேலைவாய்ப்பு மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை இணையமைச்சராக பதவி வகிப்பவர் அனந்தகுமார் ஹெக்டே. கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த அவர், அங்கு குக்கனூர் என்ற இடத்தில் நடந்த விழாவில் கலந்து கொண்டு பேசிய போது, மதச் சார்பின்மைவாதிகள், முற்போக்காளர்கள் என கூறிக் கொள்பவர்கள், உண்மையில் தங்கள் பெற்றோர் மற்றும் தங்கள் ரத்தத்தின் அடையாளம் இல்லாதவர்கள். இதுபோன்ற அடையாளம் மூலம்தான் ஒருவர் சுயமரியாதையைப் பெற முடியும். சிலர் தங்களை முஸ்லிம், கிறிஸ்தவர், பிராமணர், லிங்காயத், இந்து என அடையாளப்படுத்திக் கொள்வது எனக்கு மகிழ்ச்சியே. ஆனால் சிலர் மதச் சார்பற்றவர்கள் என கூறும்போதுதான் பிரச்சினை ஏற்படுகிறது என தெரிவித்தார். 

நமது அரசியல் சட்டத்தைப் பொறுத்தவரை, காலத்திற்கு ஏற்றவாறு அவ்வப்போது பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. தற்போது நாம் அதற்கு தயாராக இருக்க வேண்டும். பாஜக அரசு விரைவில் அந்தப் பணியில் ஈடுபடும் எனவும் குறிப்பிட்டார். 

மத்திய அமைச்சரின் இத்தகைய பேச்சுக்கு காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றது. இரண்டு நாட்களாக குளிர்கால கூட்டத்தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், மத்திய அமைச்சர் ஆனந்த்குமார் ஹெக்டேயின் பேச்சு மதச்சார்பின்மைக்கு எதிரானது எனவும் இந்திய அரசியலமைப்புக்கு எதிரான மீறல் எனவும் திமுக செயல்தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். 

அவரது பேச்சை நீக்குவதற்கு பதில் அவரை அமைச்சரவையில் இருந்து பிரதமர் மோடி நீக்க வேண்டும் எனவும் ஸ்டாலின் வலியுத்தியுள்ளார்.