Asianet News TamilAsianet News Tamil

வரும் 14-ம் அமித்ஷா தலைமையில் தென்மண்டலக் குழு கூட்டம்.. முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கிறார்?

29-வது தென்மண்டல கவுன்சில் கூட்டம் கடந்த மார்ச் மாதம் நடைபெற இருந்தது. ஆனால் கொரோனா பரவல் காரணமாக இக்கூட்டம் நடைபெறவில்லை. இந்நிலையில், வரும் 14-ம் தேதி தென்மண்டல கவுன்சில் கூட்டம் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் திருப்பதியில் நடைபெற உள்ளது.

Union Home Minister Amit Shah to meet CMs from southern states at Tirupati
Author
Tirupati, First Published Nov 6, 2021, 5:52 PM IST

வரும் நவம்பர் 14ம் தேதி அன்று தென்மண்டலக் குழு கூட்டம் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் நடைபெற உள்ளது. ஆந்திர மாநிலம் திருப்பதியில் நடைபெற உள்ள கூட்டத்தில் பங்கேற்குமாறு தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, கர்நாடகா, புதுச்சேரி, தெலுங்கானா ஆகிய தென்னிந்திய மாநில முதலமைச்சர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

29-வது தென்மண்டல கவுன்சில் கூட்டம் கடந்த மார்ச் மாதம் நடைபெற இருந்தது. ஆனால் கொரோனா பரவல் காரணமாக இக்கூட்டம் நடைபெறவில்லை. இந்நிலையில், வரும் 14-ம் தேதி தென்மண்டல கவுன்சில் கூட்டம் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் திருப்பதியில் நடைபெற உள்ளது.  

Union Home Minister Amit Shah to meet CMs from southern states at Tirupati

இந்த தென்மண்டல கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்க தென்மாநிலங்களின் முதல்வர்கள், தலைமை செயலாளர்கள், முதல்வர்களின் ஆலோசகர்கள் ஆகியோர் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. துணை நிலை ஆளுநர்கள் சிறப்பு விருந்தினர்களாக இம்மாநாட்டுக்கு அழைக்கப்பட்டுள்ளனர். இந்த கூட்டத்துக்காக ஏற்பாடுகளை ஆந்திரா முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி செய்து வருகிறார். 

Union Home Minister Amit Shah to meet CMs from southern states at Tirupati

இக்கூட்டத்தில் ஆந்திரா முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி பங்கேற்க உள்ளதாக தெரிவித்துள்ளார். அதே நேரத்தில் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் இந்த கூட்டத்தில் பங்கேற்பது இதுவரை எந்த தகவலும் இல்லை. கடந்த காலங்களில் சந்திரசேகர ராவ் பதிலாக அவரது அமைச்சர்களே பங்கேற்றனர். மேலும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், கேரள முதல்வர் பினராயி விஜயன் ஆகியோர் அமித்ஷாவின் இந்த கூட்டத்தில் பங்கேற்பார்களா? என்பதும் சந்தேகம் எழுந்துள்ளது. மு.க.ஸ்டாலினும் பினராயி விஜயனும் மத்திய பாஜக அரசு மீது கடுமையான குற்றச்சாட்டுகளையும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். ஆனால், மத்திய அரசுடன் இணக்கமாக போவதைய ஸ்டாலின் விரும்புவார் என எதிர்பார்க்கப்படுவதால் அவர் பங்கேற்க அதிக வாய்ப்புள்ளது. 

Union Home Minister Amit Shah to meet CMs from southern states at Tirupati

முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கும் பட்சத்தில் அவருடன் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு உள்ளிட்ட அமைச்சர்கள் பங்கேற்க வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Follow Us:
Download App:
  • android
  • ios