Asianet News TamilAsianet News Tamil

BREAKING மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் சென்னை வருகை திடீர் ரத்து..! காரணம் என்ன?

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்னை வருகை திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமித்ஷாவுக்கு பதிலாக ஜே.பி நட்டா சென்னை வருகை தர வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

Union Home minister amit shah chennai visit cancel
Author
Delhi, First Published Jan 6, 2021, 7:43 PM IST

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்னை வருகை திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமித்ஷாவுக்கு பதிலாக ஜே.பி நட்டா சென்னை வருகை தர வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. 

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கடந்த நவம்பர் மாதம் சென்னை வந்திருந்தார். அப்போது கலைவாணர் அரங்கில் நடைபெற்ற விழாவில் அமித்ஷா பங்கேற்ற போது அதிமுக, பாஜக கூட்டணி உறுதியானது. மேடையில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும், துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வமும் பாஜக உடன் கூட்டணி தொடருவதாக தெரிவித்தனர்.

Union Home minister amit shah chennai visit cancel

இதனிடையே தமிழகத்தில் அதிமுக முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி தான், ஆனால் பாஜக முதல்வர் வேட்பாளர் யார் என்று கட்சி தலைமை தான் முடிவெடுக்கும் என்று அந்த கட்சியின் மூத்த தலைவர்கள் கருத்து தெரிவித்தனர்.. எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக ஏற்கும் கட்சிகள் உடனே கூட்டணி என்று அதிமுக அமைச்சர்களும் தங்களது கருத்துகளை தெரிவித்து வந்தனர். இதனால் அதிமுக - பாஜக கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டது.

Union Home minister amit shah chennai visit cancel

இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வரும் 14-ம் தேதி சென்னை வருவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. துக்ளக் பத்திரிகையின் ஆண்டு விழா நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக அவர் சென்னை வருவதாக தெரிவிக்கப்பட்டது. அத்துடன் சென்னை வருகையின்போது அதிமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு குறித்தும் அவர் முக்கிய ஆலோசனை நடத்தலாம் எனக் கூறப்பட்டது. அதேசமயம், நடிகர் ரஜினியையும் சந்தித்து அவரது உடல்நலம் பற்றி விசாரிக்கலாம் எனவும் தகவல் வெளியாகி இருந்தது.

Union Home minister amit shah chennai visit cancel

இந்நிலையில், மத்திய அமைச்சர் அமித் ஷாவின் சென்னை வருகை திடீரென ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவருக்குப் பதிலாக ஜே.பி. நட்டா சென்னை வருகை தர வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

Follow Us:
Download App:
  • android
  • ios