சென்னையில் இன்று நடைபெற்ற பொதுக்குழுவில் திமுகவின் புதிய தலைவராக தேர்ந்தேடுக்கப்பட்ட மு.க.ஸ்டாலின் நாடு முழுவதும் காவி சாயம் பூசும் மோடி அரசையும், கையாலாகாத தமிழக அரசையும் தூக்கி ஏறிய வேண்டும் என்று அதிரடியாக விமர்சித்துள்ளார். பொதுக்குழுவில் என் உயிரினும் மேலான கருணாநிதியின் உடன் பிறப்புக்களே என்று கூறி தலைவரான பின் தனது கன்னி பேச்சை தொடங்கினார். கருணாநிதி இல்லை அவர் போல் பேசத் தெரியாது, பேசவும் முடியாது என திமுக தலைவராக பொறுப்பேற்ற மு.க.ஸ்டாலின் பொதுக்குழுவில் பேசியுள்ளார். எதையும் முயன்று பார்க்கக் கூடிய துணிவு கொண்டவனாக இருக்கிறேன் என்று கூறியுள்ளார். 

கருணாநிதியின் மகன் என்பதைவிட தொண்டன் என்று சொல்லிக் கொள்வதில் பெருமைப்படுகிறேன் என்றார். பிறகு கருணாநிதிக்கு நினைவேந்தல் நிகழ்ச்சியில் பாஜக தலைவர் அமித்ஷா பங்கேற்பதாக அறிவிக்கப்பட்டு பின்னர் நிதின் கட்காரி பங்கிறோர். ஆனால் பல்வேறு தரப்பிலும் நாடாளுமன்ற தேர்தலில் திமுக-பாஜக கூட்டணி ஏற்படப்போவதாக கூறப்பட்டு வந்ததது. இதற்கு தனது பேச்சில் ஸ்டாலின் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

  

இந்தியா முழுவதும் காவி நிறம் பூச நினைக்கும் மோடி அரசை தூக்கி ஏறிய வேண்டும் என்று மிக கடுமையாக பேசினார். தனி மனித சுதந்திரம், ஊடக சுதந்திரம் போன்றவை பாதுகாக்கப்பட வேண்டும் என கூறிய ஸ்டாலின், கையாலாகாத தமிழக அரசையும் தூக்கி ஏறிய வேண்டும் என்றார்.

மோடி அரசையும் மற்றும் மதவெறி அரசை அகற்றுவோம் என்றும் அதிரடியாக ஸ்டாலின் தெரிவித்த ஸ்டாலின், மோடி அரசுக்கு பாட புகட்டவா என தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்தார். அதேநேரத்தில் என் பின்னால் நீங்க வரவேண்டாம் நம் அனைவரும் ஒன்றிணைந்து செல்வோம் என்றும் கூறி உரையை நிறைவு செய்தார்.