நேற்று முன் தினம்  நடந்த பொதுக்கூட்டத்தில் பாஜக தலைவர் அமித் ஷா அப்படியொரு வெடியைக் கொளுத்திப் போடுவார் என்பதை யாரும் எதிர்பார்க்கவில்லை. ஆமாம், இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் ஊழல் அதிகம் உள்ளது.

தமிழகத்தில் அனைத்து இடங்களிலும் ஊழலை ஒழிக்க வேண்டும் என்பதுதான் அமித் ஷா வைத்த வெடி. அதிமுகவை சிறகில் வைத்து பாதுகாத்து வந்த பாஜக திடீரென அதிமுகவை இந்த அளவுக்கு தூக்கிப் போட்டு மிதிக்க என்ன காரணம்? என அரசியல் கட்சிகள் தலையை பித்துக்கொள்ளும் அளவிற்கு அரசியல் கட்சிகளை அலரவிட்டுள்ளார் அமித்ஷா.

‘அமித் ஷா சென்னைக்கு வருவதற்கு ஒரு வாரத்துக்கு முன்பே அவரது டீமில் இருந்து நான்கு பேர் சென்னைக்கு வந்துவிட்டனர்.  ஸ்டார் ஹோட்டலில் ரூம் போட்டு தங்கியிருந்த  அவர்கள், தமிழக அரசியல்  அக்கு அக்காக பிரித்து மேய்ந்து ஒரு அசல்  ரிப்போர்ட் தயாரித்துள்ளார்கள். அதில் ‘ஆட்சியில் இருக்கும் அதிமுக நம் கட்டுப்பாட்டில் இல்லை. அங்கே எடப்பாடி சொல்வதையே கேட்கும் நிலையில் அமைச்சர்கள் இல்லை. ஒவ்வொருவரும் கல்லாக் கட்டுவதில் மட்டுமே குறியாக இருக்கிறார்கள். அமைச்சர்கள் வீட்டுக்கு ரெய்டு போனால்கூட அத்தனை பேரும் சிக்குவார்கள் என அந்த ரிபோர்டில் பல ஷாக் தகவல்கள் இருந்துள்ளது.

தமிழ்நாட்டில் பாஜகவுக்கு எதிராக மக்களை திசை திருப்புவதே அதிமுகதான். கடந்த முறை பிரதமர் வந்த போது தமிழகத்தில் மோடியே திரும்பிப் போ என்ற கோஷம் சமூக வலைத்தளங்களில் எதிரொலித்தது. அதற்கு எந்த நடவடிக்கையும் எடப்பாடி அரசு எடுக்கவில்லை. இப்போதும் அமித் ஷாஜி வரும்போதும் அதேபோல சமூக வலைத்தளங்களில் பதிவிட ஆரம்பித்துவிட்டனர். இப்போதும் அமைதியாக வேடிக்கைதான் பார்க்கிறது அரசு. அவர்களுக்கு நம்மோடு கூட்டணி வைக்கவும் விருப்பம் இல்லை. நாம் தமிழகத்தில் காலூன்றுவதிலும் விருப்பம் இல்லை.

நாங்கள் எடுத்த ரிப்போர்ட்படி நாடாளுமன்ற தேர்தலில் 6 தொகுதிகளில் உறுதியாக ஜெயிக்கலாம். அதை இன்னும் அதிகரிக்க வேண்டுமானால் நமக்கு கூட்டணி தேவை. அது அதிமுகவுடன் என்பது அவசியம் இல்லை. வேறு யாருடன் வேண்டுமானாலும் இருக்கலாம்.

ஆனால், தமிழகத்தில் இனி அதிமுக தொடர வேண்டுமானால் அதற்கு நம் தயவு தேவை. அதைப் பற்றிய கவலை கொஞ்சமும் அதிமுகவுக்கு இல்லை’ என்று தெரிவித்துள்ளனர்.

இந்த விவரங்கள் அமித் ஷா சென்னைக்கு வருவதற்கு முன்பே இந்த தகவல் அவரது கைக்குப் போனதும் பேசவேண்டியதை தெளிவாக்கிக் கொண்டார். எல்லாம் சேர்த்துதான் மேடையில் தமிழக அரசு ஊழல் அரசு என எடுத்த எடுப்பிலேயே பொங்கிவிட்டார் அமித் ஷா.