தெலுங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான திருமதி. டாக்டர். அவர்களின் தாயார் திருமதி. கிருஷ்ணகுமாரி அவர்களின் மறைவுச் செய்தி அறிந்து வேதனையும், அதிர்ச்சியும் அடைந்தேன், 

தெலுங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான திருமதி. டாக்டர். அவர்களின் தாயார் திருமதி. கிருஷ்ணகுமாரி அவர்களின் மறைவுச் செய்தி அறிந்து வேதனையும், அதிர்ச்சியும் அடைந்தேன் என மத்திய இணை அமைச்சரும் எல். முருகன் அரங்கள் தெரிவித்துள்ளார். தமிழக பாஜக முன்னாள் தலைவரும் தெலுங்கானா மற்றும் புதுச்சேரி மாநில ஆளுநருமான தமிழிசை சௌந்தர்ராஜனின் தாயாரும், தமிழக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான குமரி ஆனந்தன் அவர்களின் மனைவியுமான கிருஷ்ணகுமாரி இன்று அதிகாலை உயிரிழந்தார். இது கட்சி பாகுபாடு இன்றி பலரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. 

இந்த தகவல் காங்கிரஸ் தொண்டர்கள் மற்றும் பாஜக தொண்டர்கள் மத்தியிலும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த சோக செய்தியை தமிழிசை சவுந்தரராஜன் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- என்னை பார்த்து பார்த்து ஊட்டி ஊட்டி வளர்த்த எனது தாயார் இன்று அதிகாலை என்னை விட்டு பிரிந்து சென்றுவிட்டார். என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன், வாழ்க்கையில் நீ எந்த அளவிற்கு உயர்ந்தாளும் ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்யவே இறைவன் உன்னை படைத்தார் என்று சொல்லி நல்லொழுக்கத்துடன் வாழ கற்றுக் கொடுத்தவர் எனது தாயார் என தமிழிசை உருக்கத்துடன் கூறியுள்ளார். இதற்கு பல்வேறு தரப்பினரும் தமிழிசை சௌந்திரராஜன் அவர்களுக்கு இரங்களையும் , வருத்தத்தையும் பகிர்ந்து வருகின்றனர். 

இந்நிலையில் தமிழக பாஜக முன்னாள் மாநிலத்தலைவரும், மத்திய இணை அமைச்சருமான எல். முருகன் தனது டுவிட்டர் பக்கத்தில் இரங்கள் தெரிவித்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது: தெலுங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான திருமதி. டாக்டர். அவர்களின் தாயார் திருமதி. கிருஷ்ணகுமாரி அவர்களின் மறைவுச் செய்தி அறிந்து வேதனையும், அதிர்ச்சியும் அடைந்தேன், மறைந்த திருமதி கிருஷ்ணகுமாரி, மூத்த காங்கிரஸ் தலைவர் திரு.குமரி அனந்தன் அவர்களின் துணைவியார் ஆவார். அன்புத் தாயாரை இழந்து வாடும் திருமதி. தமிழிசை சௌந்தரராஜன் அவர்களுக்கும், அவரது குடும்பத்தாருக்கும் ஆழந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். தாயார் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன். ஓம் சாந்தி!!!