கவிஞர், எழுத்தாளர், தத்துவஞானி, கல்வியாளர், ஓவியர், சுதந்திரப் போராட்ட வீரர், நாடக ஆசிரியர் என பன்முக திறமை கொண்டவர் ரவீந்திரநாத் தாகூர்.1913-ம் ஆண்டு அவர் எழுதிய கவிதைத் தொகுப்பான 'கீதாஞ்சலி' என்ற படைப்புக்கு நோபல் பரிசு கிடைத்தது.

இந்திய கலாசாரத்தின் அடையாளமாக திகழ்ந்த தாகூர் இயற்றிய 'ரவீந்திரசங்கீத்' நியதியில் உள்ள 2 பாடல்களான 'ஜன கண மன' மற்றும் 'அமர் சோனார்' ஆகியவை இந்தியா மற்றும் வந்காலத்தின் தேசிய கீதங்களாக உள்ளன. 

நீண்ட நாட்களாக நோய் வாய்ப்பாட்டு இருந்த இவர் ஆகஸ்ட் 7-ஆம் தேதி மறைந்தார். 

இதே போல் எழுத்தாளர், கவிஞர், மூத்த அரசியல் தலைவர், திமுக தலைவர் என பன்முக திறன் கொண்ட கருணாநிதி உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்ப்பட்டிருந்த நிலையில் நேற்று (ஆகஸ்ட் 7-ஆம் தேதி மறைந்தார். இதன் மூலம் இந்த தேதி வரலாற்றில் இடம் பெரும் அளவிற்கு மறக்க முடியாத ஒரு நாளாக மாறிவிட்டது.

இவர்கள் தவிர ஆகஸ்ட் 7-ஆம் தேதி என்பது மிக முக்கியனா தினமாகும். இந்த நாளில் பல்வேறு பிரபலங்கள் மறைந்து உள்ளனர். அமெரிக்காவை சேர்ந்த பிரபல ஓவ்யர் மோரிஸ் லூயிஸ், மெக்சிகோ நாட்டைச் சேர்ந்த பிரபல கவிஞர் ரொசாரியோ காஸ்டெல்லனோஸ், லெபனான் ஜனாதிபதி காமோல் சாமோன், ஆகியோர் ஆகஸ்ட் மாதம் 7 ஆம் தேதி மறைந்துள்ளனர் என்பது குரிப்பிடதிதக்கது. 

இந்த தகவல் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி இருந்தாலும்... சிகரம் தொட்ட பலரை இழந்துள்ளது அதிர்ச்சியாகவும் உள்ளது.