ஸ்டாலின் இளைஞரணி செயலாளராக இருந்தபோது எந்தவொரு நிகழ்ச்சியாக இருந்தாலும் சரி, அந்தந்த மாவட்ட செயலாளர்களுக்கு முன்கூட்டியே தெரியப்படுத்தி விட்டு தான் செல்வார், எந்தவொரு ஈகோவும் பார்க்காமல் இருந்துவந்தார். அது கருணாநிதி இருந்தபோதும் சரி, மறைந்தும் கூட ஸ்டாலினின் மாவட்ட நிகழ்ச்சிகள் அனைத்தும் மாவட்ட செயலாளர்களுக்கு சொல்லிவிட்டுத்தான் அங்கு செல்வார். ஆனால், உதயநிதி செய்வது ஒட்டுமொத்த மாசெகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

உதயநிதி இளைஞரணி மாநிலச் செயலாளரானதிலிருந்து, மாவட்டச் செயலாளர்களுக்குமான உறவு சுமுகமாக இல்லை என திமுகவினர் அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான்,  பொறுப்புக்கு வந்த பின் நடத்திய முதல் கூட்டத்திலேயே, மாவட்டச் செயலாளர்கள் டார்கெட் செய்யப்பட்டனர், தொடர்ந்து பல சம்பவங்களை முன் வைத்திருந்தனர். காரணம் அன்பில் மகேஷ் என சொல்கிறார்கள்.

இதனைத் தொடர்ந்து உதயநிதியின் பல செயல்பாடுகள், மாவட்டச் செயலாளர்களை டம்மியாக்கவும், கட்சியில நாங்க தான் கெத்து, நீங்கல்லாம் வெத்து என சொல்லாமல் செயலில் காட்டி வருகின்றனர். அதாவது கலைஞர் உடல்நிலை சரியில்லாமல் இருந்த சமயத்தில், செயல்தலைவராக இருந்து கட்சியை கட்டுப்பாட்டில் கொண்டுவந்ததைப்போல, இப்போது அறிவிக்கப்படாத செயல் தலைவராக உதயநிதி செயல்படுவதாக மா.செக்கள் புலம்புகின்றனர்.

இதை உறுதிபடுத்தும் விதமாக, சென்னை மயிலாப்பூர் பகுதியைச் சேர்ந்த வட்டச் செயலாளர் மு.ராஜேந்திரன் வீட்டு கல்யாண விசேஷம் கடந்த 3 ஆம் தேதி மந்தைவெளி சுபம் கல்யாணம் மண்டபத்தில் நடந்தது. இதில், மணமக்களை வாழ்த்த இளைஞரணி மாநிலச் செயலாளர் உதயநிதி அழைக்கப்பட்டிருந்தார். அதேபோல மாவட்டச் செயலாளர் என்ற முறையில் சென்னை மேற்கு மாவட்டச் செயலாளர் ஜெ. அன்பழகனும் அழைக்கப்பட்டிருந்தார்.

மாலை 7.30க்கு உதயநிதி ஸ்டாலின் வந்தபோது இளைஞரணியினர் சிறப்பான வரவேற்பு கொடுத்தனர்.அடுத்ததாக மாவட்டச் செயலாளர் ஜெ. அன்பழகன் வந்தார், அவருக்கும் சிறப்பான  வரவேற்பு அளிக்கப்பட்டது. பொதுவாக இதுபோன்ற நிகழ்வுக்கு ஒரு கட்சித் தலைவர் வரும் போது இன்னொரு கட்சித் தலைவர்கள் வரமாட்டார்கள். அவர் வந்துட்டு கிளம்பியாச்சா? என அங்கிருக்கும் தனது ஆதரவாளர்களிடம் கேட்டுக்கொண்டு தான் கட்சித் தலைவர் நிகழ்வுக்கு வருவார். ஏனென்றால் பொதுநிகழ்வுகளில் மற்ற கட்சியினரை நேரில் சந்திப்பதை தவிர்ப்பதற்காக இப்படி செய்வார்கள்.

ஆனால் இந்த கல்யாண விசேஷம் திமுக கட்சிக்காரரோட வீட்டு விசேஷம். இந்த நிகழ்வுக்கு பெரும்பாலும் திமுக தலைவர்கள் வருகை தந்தனர்.அப்படி இருக்கையில் உதயநிதி வந்து விட்டுப் போய் விட்டாரா? என கேட்டுக் கொண்ட பின் தான் மாவட்ட செயலாளர் அன்பழகன் வருகிறார்.

அப்படி என்றால் உதயநிதியை நேரில் சந்திக்க அவர் விரும்பவில்லை, அதுமட்டுமல்ல  உதயநிதி வரும்போது தான் வந்தால் தனக்கான முக்கியத்துவம் இல்லாமல் போகும் என்பதை நன்கு உணர்ந்ததாகவே சொல்கிறார்கள் அறிவாலய புள்ளிகள். அட கல்யாண விசேஷத்தை விடுங்க, மாவட்டங்களில் நடக்கும் இளைஞரணி நிகழ்வுகளுக்கு கூட சம்பந்தப்பட்ட மா.செகளுக்கு முன்கூட்டியே தகவல் சொல்வதே இல்லை. மா.செவின் அனுமதி பெற்றுதான் விசேஷம் நடத்தணும். ஆனா இப்போ உதயநிதி இளைஞரணிக்கு வந்ததிலிருந்து சம்பிரதாயத்துக்கு கூட மாசெகளுக்கு தகவல் சொல்வதே இல்ல என புலம்புகிறது உ.பி,க்கள். 

தொடர்ந்து விடாமல் இப்படி அவமானப்படுத்தும் விதமாக சம்பவம் செய்யும் பின்னணி என்னவாம்? என சந்தானம் ஸ்டைலில் கேட்டு வருகிறார்களாம் மாசெக்கள்.