தி.மு.க.தலைமையில் தமிழகத்தில் ஆட்சி அமைந்து, தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வராக ஜூன் 3ம் தேதி கருணாநிதி பிறந்த நாளன்று பதவியேற்பார் என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தி.மு.க.தலைமையில் தமிழகத்தில் ஆட்சி அமைந்து, தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வராக ஜூன் 3ம் தேதி கருணாநிதி பிறந்த நாளன்று பதவியேற்பார் என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 
4 தொகுதி இடைத்தேர்தலுக்காக பிரசாரம் செய்து வருகிறார் உதயநிதி ஸ்டாலின். திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் சரவணனை ஆதரித்து, விரகனூரில் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், ’’தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த மக்கள் தயாராகி விட்டனர். டெட்பாடியின் ஆட்சியை சவப்பெட்டிக்குள் வைத்து நாலு புறமும் ஆணி அடிப்பதற்கு தான் இந்த 4 தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடக்கிறது.

கடந்த ஏப்ரல் 18-ம் தேதி நடைபெற்ற மக்களவை மற்றும் 18 சட்டமன்ற தேர்தலில் அனைவரும் உதய சூரியன் சின்னத்திற்கு வாக்களித்திருப்பீர்கள் என நான் நம்புகிறேன். அதன் மூலமாக நரேந்திர மோடியின் ஆட்சி மட்டுமல்ல. எடப்பாடி பழனிசாமியின் ஆட்சியும் விரைவில் மாறப்போகிறது. சென்ற மாதம் மோடியை வீட்டுக்கு அனுப்ப ஒரு முடிவெடுத்தீர்கள்.

அதுபோல, இந்த மாதம் ஒரு முடிவெடுத்து இங்குள்ள ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும். 22 சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலிலும் திமுகவின் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெறுவர். எடப்பாடி பழனிசாமியின் ஆட்சி கோமா நிலையில் உள்ளது’’ என அவர் தெரிவித்தார்.
