காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தி இன்று தமிழகம்  முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடந்து வருகிறது.

இதில் திரளாக களம் இறங்கிய எதிர்கட்சியான திமுக போராட்டத்தில் துவம்சம்  செய்துள்ளது.

வீறு கொண்ட சிங்கமாக எழுந்த உதயநிதி ஸ்டாலின்..

சென்னை அண்ணா சாலையில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் நடத்திய மறியல்  போராட்டத்தில் ஆயிரகணக்கான தொண்டர்களும் பொதுமக்களும் கலந்துக் கொண்டனர். பின்னர் ஸ்டாலின் மற்றும் தொண்டர்களை போலீசார் கைது செய்தாலும்,வீறு கொண்ட  சிங்கமாக எழுந்த உதயநிதி ஸ்டாலின்,தடையை உடைத்தெறிந்து பேரணியாக  போர்க்கொடி ஏந்தி சென்றார்.  

ஸ்தம்பித்த மெரீனா

பல்லாயிரக்கணக்கான தொண்டரகள் ஒன்றாக திரண்டு மெரினாவில் திரண்டதால்,  மீண்டும் ஒரு மெரீனா புரட்சி உருவானதை நினைவு படுத்தியது இன்றைய திமுகவின்  போராட்டம்.

அப்பா 8 அடி பாய்ந்தால்...பிள்ளை 16  அடி..!

அப்பா 8 அடி பாய்ந்தால் பிள்ளை 16 அடி பாய தானே செய்யும் என்பதற்கு ஏற்ப,திமுக செயல் தலைவர் ஸ்டாலினுக்கு பக்க பலமாக, தடையை மீறி கருப்பு கொடி ஏந்தி  மாபெரும் பேரணியாக போராட்ட முழக்கங்களுடன் சென்றார் உதயநிதி.

ஒரு கட்டத்தில்,அண்ணா சமாதியை நோக்கி செல்லும் போது போலீசாருக்கும்  போரட்டகாரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்படும் சூழலிலும் எதையும் பொருட்படுத்தாமல்,உதயநிதி ஸ்டாலின் தொண்டர்களுடன் படை எடுத்தார்.

புலிக்கு பிறந்தது பூனையாகுமா...?

மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட ஸ்டாலின் மற்றும் தோழமை கட்சி தொண்டர்கள் கைது  செய்யப்பட்டாலும், உதயநிதி போராட்டத்தை முன்னெடுத்து சென்றார்.

படத்தில் மட்டுமே ஹீரோவாக தோற்றமளித்த உதயநிதி ஸ்டாலின் தற்போது,அரசியல் வாழ்கையில் தொண்டர்கள் மத்தியில் ஸ்டார் மார்க் வாங்கி உள்ளார் என்றே கூறலாம்.

இதற்கு முன்னதாக, "தன்னால் கட்சிக்கு எந்த பங்கமும் ஏற்படாது எனவும், ஒரு வேளை அப்பா என்னை அழைத்தால் அரசியலில் ஈடுபடுவேன் எனவும் தெரிவித்து இருந்த  உதயநிதி ஸ்டாலின், சொன்னபடி செய்து காட்டிவிட்டார்.

அரசியலிலும் ஈடுபட்டு, போராட்டத்தையும் வெற்றிகரமாக கொன்று சென்று உள்ளார்   உதயநிதி.... இந்த போராட்டத்தின் மூலம், அரசியலில் அடுத்த படிக்கு சென்றது  மட்டுமில்லாமல், மக்கள் மத்தியில் தனக்கென தனி இடத்தையும் பிடித்துள்ளார் உதயநிதி  ஸ்டாலின்.