Asianet News TamilAsianet News Tamil

நகைகளை அடகு வைக்கச் சொன்ன உதயநிதி... மகன் மீது நடவடிக்கை எடுப்பாரா மு.க.ஸ்டாலின்..? அண்ணாமலை கேள்வி..!

இது சரியா? முதல்ல அவர் தன்னுடைய மகன் மீது நடவடிக்கை எடுப்பாரா? " என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடுமையாக விமர்சித்துள்ளார்.
 

Udayanidhi who asked to pawn jewelery ... will MK Stalin take action against his son ..? Annamalai question ..!
Author
Tamil Nadu, First Published Sep 25, 2021, 3:31 PM IST

அன்னைக்கு உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரத்தில், நகைகடன் தள்ளுபடி என்று நகைகளை அடகு வைக்க சொன்னாரே. ஆனால் சட்டசபையில் முறைகேடாக அடகு வைத்தால் நடவடிக்கை எடுப்போம் என்று முதல்வர் சொல்கிறார். இது சரியா? முதல்ல அவர் தன்னுடைய மகன் மீது நடவடிக்கை எடுப்பாரா? " என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடுமையாக விமர்சித்துள்ளார்.

Udayanidhi who asked to pawn jewelery ... will MK Stalin take action against his son ..? Annamalai question ..!
சென்னை, கமலாலயத்தில் பேசிய அவர், ’’ஏ.கே.ராஜன் கமிட்டி அறிக்கை வந்தவுடன் மம்தா, உத்தவ் தாக்ரே காங்கிரஸ் திமுக போன்றவர்களின் கிச்சன் கேபினட் வெளியே வருகிறது. ஏ.கே.ராஜன் ரிப்ரோட்டில் பயங்கர முரண்பாடுகள் உள்ளன. ஆனால், திமுகவின் தேர்தல் அறிக்கை விட ஏ.கே.ராஜன் அறிக்கையை சிறப்பாகவே இருந்தது. மக்களிடம் தவறான தகவல்களை தெரிவிக்க திமுகவின் தேர்தல் அறிகையுடன் போட்டி போட்டுள்ளது ஏ.கே.ராஜன் அறிக்கை.

ஏனெனில், அந்த ரிப்போர்ட்டில் நீட் சமூக நீதிக்கு எதிரானது என்ற கருத்தை வலுப்படுத்துவதாக தெரியவில்லை. மாறாக, இரண்டரை லட்சத்திற்கு கீழ் வருமானம் பெறுபவர்களின் குழந்தைகள் நீட் மூலம் அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளது அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வருடம் 150 மாணவர்களோடு எய்ம்ஸ் திறக்க மத்திய அரசு அனுமதி தந்தும், தமிழக அரசு எய்ம்ஸை திறக்க வேண்டாம் என்று பிடிவாதம் பிடிக்கிறது.Udayanidhi who asked to pawn jewelery ... will MK Stalin take action against his son ..? Annamalai question ..!

இது மட்டும் சமூக நீதிக்கு எதிரானது இல்லையா? இதுக்கு காரணம், இவர்கள் நடத்தும் கல்லூரிகளில்தான் படிக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். நீட் வந்த பிறகுதான் பண முதலைகள் கட்டுபாட்டுக்குள் வந்திருக்கிறார்கள். தமிழகத்தில் வியாபார சந்தையாக கல்வியை வைத்திருந்த 3 மாவட்டங்களை நீட் உடைத்திருக்கிறதே, அதை ஏன் ஏ.கே.ராஜன் கமிட்டி பேசவில்லை?

அரசுக்கு சாதகம் இல்லாத விஷயங்களை இந்த அறிக்கையில் ஏன் சேர்க்கவில்லை? அரசு பள்ளியின் தரத்தை உயர்த்தவே ஒரு அரசு சிந்திக்க வேண்டுமே தவிர, அரசியல் செய்ய தேவையில்லாத விஷ பரீட்சையை கையில் எடுக்க கூடாது. 99 சதவீதம் நீட் பயிற்சி மையம் சென்று பயிற்சி எடுத்துள்ளனர் என்று ஏகே ராஜன் சொல்கிறாரே.? அதற்கு என்ன ஆதாரம்? அதுவும் அரசு சொன்னதாக சொல்கிறாரே? அந்த தரவுகள் எங்கே? நீட் வந்தால் தமிழகத்தில் மருத்துவ கல்லூரி ஏழை மாணவர்கள் காணாமல் போய்விடுவர் என்று சொல்கிறாரே?

இதை சொல்வதற்கு ஏ.கே.ராஜனுக்கு என்ன தகுதி இருக்கிறது? ஒரு அரசியல்வாதி போல ஏ.கே.ராஜன் பேசுகிறாரே தவிர, ஒரு கமிட்டியின் தலைவர் போல பேசவில்லை. இப்போது உள்ளாட்சி தேர்தலுக்கு தயாராகி வருகிறோம். எங்கள் கூட்டணி சிறப்பாக இருக்கிறது. இனியும் சிறப்பாகவே இருக்கும். திமுக கூட்டணி மாதிரி சண்டை போட்டுக் கொண்டு தனியாக நிற்க மாட்டோம். திமுக ஆட்சிக்கு வந்து நாலே மாதம்தான் ஆகிறது. ஹனிமூன் பிரியட்டில் இருக்கிறது. ஆனால், இந்த மாதத்தில் அவர்கள் செய்த தவறுகள் ஏராளம். பொய்கள் ஏராளம்.

Udayanidhi who asked to pawn jewelery ... will MK Stalin take action against his son ..? Annamalai question ..!

அன்னைக்கு உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரத்தில், நகைகடன் தள்ளுபடி என்று நகைகளை அடகு வைக்க சொன்னாரே. ஆனால் சட்டசபையில் முறைகேடாக அடகு வைத்தால் நடவடிக்கை எடுப்போம் என்று முதல்வர் சொல்கிறார். இது சரியா? முதல்ல அவர் தன்னுடைய மகன் மீது நடவடிக்கை எடுப்பாரா? இதையெல்லாம் நாங்கள் உள்ளாட்சி தேர்தலில் மக்களிடம் எடுத்து செல்வோம். எங்க கூட்டணிக்கு மக்கள் வாய்ப்பு தருவார்கள்.

நிதியமைச்சரின் ட்வீட்டை பொறுத்தவரை, பொது அறிவு மனிதனுக்கு மிக முக்கியம். தமிழ்நாட்டில் உள்ள ஒரே அறிவாளி பொருளாதார புலி தான் மட்டுமே என்று அவர் எண்ணி கொள்கிறார். அவர் முதலில் நிதி சுமையை சீர்படுத்த வேண்டும். 3 கருத்துக்களை சொல்லி வருகிறாரே தவிர, அவரது நோக்கம் சரியில்லை" என்றார்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios